KOLNews

ஒரு குட்டி கதையும்.. ரஜினி அரசியலும்..!

ஒரு ஊரில், வேலை இன்றி சுற்றித்திரிந்த குடும்பஸ்தன் ஒருவனை, எப்படியோ ஒரு இன்டெர்வியூவுக்கு அழைத்துவிட்டார்கள். அதுவும் காவல் துறையில் .

அதில் கலந்து கொண்ட மூன்று பேரிடம் பொது அறிவை சோதிக்கும் வண்ணம், ஒரே ஒரு கேள்வி தனித்தனியாக கேட்கப்பட்டது. 

இயேசுவை கொன்றது யார்..?",  என்பது தான் அந்தக் கேள்வி.

 யூதர்கள் என்று ஒருவன் சொன்னான்.

 ரோமானியர்கள் என்று சொன்னான் இன்னொருவன்.

Image result for attending interview

அதே கேள்வியை நம்ம ஆளிடம்  கேட்டபோது , 'எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.. யோசித்து சொல்கிறேன்..!'  என்று சொல்லி விட்டு வீட்டிற்கு வந்துவிட்டான்..

வீட்டுக்கு வந்து அவனிடம், அவன் மனைவி, 'இன்டர்வியூவுக்கு போனீர்களே என்ன ஆச்சு..?',  என கேட்க அதற்கு அந்த அறிவார்ந்த கணவன்,  "கிட்டத்தட்ட வேலை கிடைத்து விட்ட மாதிரிதான்.. இப்போது என்னை ஒரு கொலை கேஸை துப்பறிய சொல்லியிருக்கிறார்கள்", என்றானாம்.

Image result for rajini with district secratries

இதே போல தான், அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவிக்காத ரஜினி, தற்போதைய அரசியல் கட்சிகளின் கட்டமைப்பை விமர்சிப்பதும், தமிழகத்தில் உள்ள 236 தொகுதியையும் வென்று விட்டதாகவே கற்பனை செய்து கொண்டு.. அடடா ..கட்சி காரர்கள் ஆட்சியில் மூக்கை நுழைத்தால் நிர்வாகம் கெட்டுவிடுமே..! என்று நெஞ்சுருகி ரசிகர்களிடம் பேசுவதும், விவாதிப்பதும், இன்டெர்வியூவுக்கு சென்று திருப்பியவன், மனைவியிடம் சொல்லும் பதில் போலவே 'கொஞ்சம் ஓவராக' இருக்கிறது.

முதலில் கட்சியை ஆரம்பிங்க ரஜினி சார்.

English Summary

A short story and Rajini's politics ..!

Latest Articles

KOLNews