KOLNews

கொஞ்சம் சிந்திப்போமே..?

நாம் பைத்தியமா மாறுவதற்கும் மனிதனா தொடர்வதற்கும் அவரவர் மண்டைக்குள் புகுத்தி வைத்திருக்கும் ideology யே காரணம்.

ஏதாவது ஒரு ideology மண்டைக்குள் ஆழமா இறங்கிய பிறகு அவர்களுக்கு உலகமே அது ஒன்றே ஒன்றுதான்.அதைத் தாண்டி அவர்கள் சிந்திப்பதே இல்லை. அது அவர்களின் நம்பிக்கை சார்ந்த விசயமோ,கருத்தியலோ ஏதோ ஒரு குப்பையா கூட இருக்கலாம். இந்தக் குப்பைகளைக் வெளியே எடுக்காமல் புது idea ஏதும் மண்டைக்குள் நுழையவே முடியாது.நிறைந்து வழியும் hard disk ல் உள்ள தேவையில்லாத file களை delete பண்ணியோ வேறு ஒரு disk ல் மாற்றாமல்  புது file எதையும் save பண்ண இயலாது.இதே கதைதான் ideology க்கும்.

இந்த ideology சண்டையைத்தான் social media ஆவில் தொடர்ந்து பெரும்பாலானோர் செய்து வருகிறார்கள். தாங்கள் அறிந்த விசயமே சரியென்றும் அதையே மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பே அது. அது பதிவாகவோ share பண்ணும் விசயமாவோ, forward ஆ இருக்கலாம். இப்படியான போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. 

இதில் பலர் தங்களின் வழிகாட்டிகளாக மத குருமார்களையோ,மகான்களையோ,தத்துவவாதிகளையோ,அரசியல்தலைவர்களையோ,இலக்கியவாதிகளையோ,புரட்சியாளர்களையோ,சீர்திருத்தவாதிகளையோ,மாமேதைகளோ,தொழில் அதிபர்களையோ,வீரர்களையோ,கலைஞர்களையோ,வல்லுனர்களையோ,சாதனையாளர்களையோ,விஞ்ஞானிகளையோ கொண்டிருக்கலாம்.

Trump worshipper death: Mental sickness & Poverty lead to 'blind hero  worship'

இப்படி வழிகாட்டிகளாக கருதியவர்களைப் பற்றி சிலாகிப்பதிலும்,அவர்கள் செய்த காரியங்களைப் பற்றி ஆலோசிப்பதிலும்,அவர்களைப் பற்றிய நினைவுகளிலேயே பலரது வாழ்க்கை உருண்டோடிவிடுகிறது.அத்தோடு வாழ்க்கை அங்கேயே தேங்கி விடுகிறது.ஒரு கால கட்டம் வரை வழிகாட்டிகளின் துணை தேவையிருக்கலாம்.ஆனால் அவர்களோடு நமது சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமா என்பதே கேள்வி!

488 Following Footsteps Illustrations & Clip Art - iStock

அந்த வழிகாட்டிகள் தங்களது கடமையை திறம்பட செய்துவிட்டுச் சென்றிருப்பார்கள்,ஆனால் அவர்களைப் போலவே மனிதர்களாக பிறந்த நாம் செய்ய வேண்டியதை நமக்கு திருப்தி அளிக்கும் விதத்திலாவது செய்தோமா என்பதும் தெரியாது?. அவ் வழிகாட்டிகள் வாழ்ந்த காலத்தில் இப்போதுள்ள technology யோ வசதிகளோ சாதனங்களோ பெரும்பாலும் இருந்திருக்காது.இல்லாதபோதும், அவர்கள் சாதித்துள்ளார்கள்.ஆனால்,அவ்வளவு வசதிகளும் வாய்ப்புக்களும் நேரமும்  இருந்தும் நாம் ஏன் செய்வதில்லை? கொஞ்சம் சிந்திப்போமே?.நம்மை நாமே தற்சோதனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது.

-  தினகரன் செல்லையா 

English Summary

Can we think a little ..?

Latest Articles

KOLNews