KOLNews

கொரனாவும் சுகாதாரத்துறையின் அவலங்களும் ..! - கொரனா சுகாதார அமைப்பு யாரினால் கட்டுபடுத்தப்படுகிறது?

மெய்.சேது ராமலிங்கம்

கொரனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் இல்லை, ஆக்சிஐன் சிலிண்டர்கள் இல்லை சாலைகளிலும் நடைபாதைகளிலும் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். ஆக்சிஐன் சிலிண்டர்கள் இல்லாததால் பல நோயாளிகள் மரணமடைவது அதிகரித்து வருகின்றது, அவர்கள் இறந்த பின்னர் எரிப்பதற்கோ புதைப்பதற்கோ சுடுகாடு இல்லை. இவை குஐராத்திலும் உத்தரபிரதேசத்திலும் மத்திய பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களின் நிலைமை. இந்த நிலைமை நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறது.

இந்நிலைமை பல கேள்விகளை எழுப்புகிறது. நமது சுகாதார கட்டமைப்பு அவ்வளவு மோசமானதா ஒரு சிலிண்டர் கூட கிடைக்காமல் ஏன் நோயாளிகள் இறந்து போகின்றனர் இதற்கிடையில் தடுப்பூசி போடுவது கட்டாயம் எனக்கூறி அதற்கும் தனித்தனியே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 130 கோடி பேர் உள்ள நாட்டில் 12 கோடி பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முறையான பரிசோதனைகள் இன்றி தடுப்பூசி மருந்துகள் வியாபார நோக்கில் சந்தைக்கு கொண்டு வரப்பட்டதால் ஊசி போட்ட பலர் இறந்துள்ளனர்.

COVID-19 Vaccination: Johnson & Johnson, Moderna, Sputnik V; list of coronavirus  vaccines arriving in India soon

எதற்கு தடுப்பூசி?

தடுப்பூசி போட்டால் ரத்தம் உறையலாம், அதனால் கொரனா வராது என்ற உத்தரவாதம் கிடையாது, இரு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டால் கூட மீண்டும் தொற்று வரும் என்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கே உதாரணமாக திகழ்கிறார். குறிப்பிட்ட மருந்துக் கம்பெனியோ அல்லது அரசோ மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு பொறுப்பேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பறம் எதற்கு தடுப்பூசி

நமது சுகாதார அமைப்பில் என்ன நடக்கிறது ?

ஏன் அது ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ளாமல் நிலை குலைந்து போனது நமது சுகாதார அமைப்பானது யாரால் கட்டுபடுத்தப்படுகிறது இவற்றை புரிந்து கொள்ள சுகாதார அமைப்பின் வரலாற்றிலிருந்தே தொடங்குவோம்.

சுகாதாரத்துறை வளர்ந்த விதம்

1978ல் ஐநாவின் யுனிசெப்பும் உலக சுகாதார அமைப்பும் அமைப்பானது 2000 அனைவருக்கும் ஆரோக்கியம். அல்மா ஆட்டா என்ற முழக்கத்தின் மூலமாக முன் வைத்தது. அது சுகாதாரம் என்பது ஒரு மனித உரிமை என்பதை உறுதிபடுத்தியதோடு சர்வதேச அளவில் சுகாதாரமானது ஒருவரின சமூக பொருளாதார நிலையை தாண்டிஎந்த வித ஏற்றதாழ்வும் இன்றி அனைவருக்கம் கிடைக்க வேண்டும் என்பதை அறிவித்தது.

ALMA ATA DECLARATION 'The main goal of Governments and World Health  Organization in the coming decades should be the attainment by all people  of the world. - ppt video online download

மக்களின் வாழ்நிலையை மோசமாக்கிய தனியார்மயம் 

இதனைத் தொடர்ந்த இரண்டு ஆண்டுகளில் மருந்து கம்பெனிகள் தங்களது லாபவிகிதம் குறையும் என்று கூறி வளர்ந்த நாடுகளின் அரசுகள் மூலமாக அல்மாஆட்டாவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன. 1980ல் உலக வங்கி தனது சுகாதாரத்துறைக்கான முதல் கொள்கை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் ஆரம்ப சுகாதாரத்தை தேர்வு செய்யப்பட்ட தடுப்பு உத்திகளை முன்வைத்தது. அந்த உத்திகளில் சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பது அவற்றில் மட்டும் தலையிடுவது என்றும் முன் வைத்தது. இதன் மூலம் அல்மா ஆட்டா முன்வைத்த அனைவருக்குமான ஆரோக்கியம் என்ற கொள்கையானது கைவிடப்பட்டது.இதிலிருந்து சுகாதார சேவைகள் மருத்துவம் மற்றும் மருந்து சப்ளை ஆகிய அனைத்தும் துரிதமான முறையில் தனியார்மயமாக்கப்படத் தொடங்கின.

தனியாரினால்தான் உயிரிழப்புகள்

இந்த கொள்கையானது மக்களின் வாழ்நிலையையும் அவர்களின் பணி நிலைமைகளையும் மோசமாக்கின. சமூக ஏற்றத்தாழ்வுகளை பிளவுகளை மேலும் ஆழப்படுத்தின. அவர்கள் சுகாதாரப் பராமரிப்பை பெற முடியாத நிலையும் உருவானது. இப்போது பார்க்கும் நிலையானது அதாவது கொரனா கடந்த ஆண்டு வந்த போது சுகாதார கட்டமைப்பு வசதிகளுக்கும் மனித வளங்களுக்கும் தனியாரையே சார்ந்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. ஏழை நாடுகள்மட்டுமல்ல பெரும் வசதி படைத்த நாடுகளான இத்தாலி,ஸ்பெயின், இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகள் கூட தனியாரிடம் சுகாதார கட்டமைப்பை கொடுத்ததால் பல உயிரிழப்புகளை சந்தித்தன. அரசு கட்டமைப்பு இல்லாததால் தனியார் மருத்துவமனைகளின் கட்டமைப்பு பெருந்தொற்று நெருக்கடியை எதிர் கொள்ள முடியாமல் திணறின என்பது நினைவிலும் கவனத்திலும் கொள்ளவேண்டிய விசயமாகும்.

சுகாதாரம் ஒரு அடிப்படை உரிமை

முன்னதாக ஐநாவின் அகில உலக மனித உரிமைப்பிரகடனம் சுகாதாரத்தை ஒரு அடிப்படைமனித உரிமையாக பிரகடனப்படுத்தியிருந்தது. ஆனால் அரசுகள் கடந்த 40 ஆண்டுகளாக கடைப்பிடித்த சுகாதாரக் கொள்கைகள் சுகாதார சேவைகளை விற்பனைக்குரிய சரக்குகளாகவும் பங்கு சந்தை மூலதனமாகவும் மாற்றி சுருக்கி விட்டன 

தனியார்மயமாக்கப்பட்டதிலிருந்து வணிகமயமாக்கப்பட்டு பின்னர் நிதி மூலதனத்தில் கட்டுபாட்டில் வந்த சுகாதாரத்துறை 1990களின் முற்பகுதியில் உலகமயமாக்கல் கொள்கைகளின் ஒரு பகுதியாக புதிய தாராளவாத கொள்கைகளும் கட்டமைப்பு சீர்திருத்தங்களும் சுகாதார சேவைகளில் கடுமையான மாற்றங்களை அமல்படுத்தின

உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் பல நாடுகளில் குறிப்பாக வளரும் மற்றும் ஏழை நாடுகளில் உலக வங்கியும் சர்வதேச நிதியமும் நிபந்தனைகளின் அடிப்படையில் கடன்களை அளித்தது. அந்த நிபந்தனைகளில் முக்கியமான ஒன்று. அரசு நலத்திட்டங்களுக்கான செலவினங்களை குறைப்பதாகும்.

World Bank approves Loan for STARS Project - BankExamsToday

அதன்படி மருத்துவமனைகள் மருந்து கம்பெனிகள் ஆராய்ச்சி கூடங்கள் ஆகிய அனைத்து அரசு மருத்துவ கட்டமைப்பிற்கான நிதி ஒதுக்கீடானது வெகுவாக குறைக்கப்பட்டது இதனைத்தொடர்ந்து பொது சுகாதார சேவைகள் தனியார் மருத்துவமனைகளுக்கும் தனியார் மருந்துக்கம்பெனிகளுக்கம் தனியார் மருத்துவ நடைமுறைகளுக்குமாக மாற்றப்பட்டன.

தனியார்மயமாக்கப்பட்டபின்னர் சுகாதாரத்துறையானது முழுமையானதும் ஆரம்ப சுகாதாரம் அனைவருக்குமான ஆரோக்கியம் என்ற அடிப்படை கொள்கை கைவிடப்பட்டது. லாபம் தராது என்பதற்காகவே நோய் தடுப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆகிய மூன்று அடிப்படையான சுகாதாரக் கொள்கைகளில் முதன்மையான நோய் தடுப்பு மருத்துவத்துறை கார்ப்பரேட்டுகளின் நிர்ப்பந்தத்தின் பேரில் படிப்படியாக கைவிடப்பட்டு வருகிற்து.

உலகமயமாக்கலுக்கு முன்னதாக அரசுகள் மருந்து கம்பெனிகளுடன் பேரம் பேசி மருந்துகளையும் மருத்துவ உபகரணங்களையும் வாங்கிக்கொண்டிருந்தனர் புதிய தாராளவாத கொள்கைகளினால் அந்த முறை ரத்து செய்யப்பட்டது. அந்த இடைவெளியில் நுழைந்த பன்னாட்டு மருந்துகம்பெனிகள் தங்களது தயாரிப்பு மருந்துகளை சந்தைப்படுத்த தொடங்கினர்.

What does a Clinical Laboratory Technologist Do and How to Become One

இதில் அமெரிக்காவில் உள்ள கார்டினல் ஹெல்த்(cardinal health) என்ற பன்னாட்டு மருத்துவ கம்பெனியானது 46 நாடுகளில் இயங்குகிறது. இந்த 46 நாடுகளில் மருத்துவமனைகளுக்கு மருத்துவ பொருட்கள்,மருந்துகள் சுகாதார அமைப்புகள் அறுவை சிகிச்சை அறைகள் அதற்கான நவீன கருவிகள் கிளினிக்கல்பரிசோதனைக்கூடங்கள் மற்றும் மருத்துவர்கள் பணிபுரிவதற்கான அலுவலகங்கள் ஆகியவற்றை சப்ளை செய்கிறது. இந்த கம்பெனி கடந்த 2019ல் மட்டும் 136,8 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியுள்ளது. அமெரிக்காவின் அதிக வருவாய் ஈட்டும் கம்பெனிகளில் 14வது இடத்தில் உள்ளது. 

அரசின் பொதுத்துறை சேவைகள் வெகுவாக குறைக்கப்பட்டு தனியார்மயமாக்கப்படுவது ஊக்கப்படுத்தப்பட்டதால் அது பன்னாட்டு இன்சுரன்ஸ் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கதவுகளை திறந்து விட்டது சிக்னா என்ற உலகளாவிய இன்சுரன்ஸ் கார்ப்பரேட் கம்பெனி 155 பில்லியன் டாலர்கள் முதலீட்டுடன் 30 நாடுகளில் இயங்குகிறது. 30 நாடுகளிலும் 74000 பேர் பணிபுரிகின்றனர். அனைத்து நோய்களையும் வகை பிரித்து அதற்கேற்ப நீண்டகால நோய்கள் உடனடியாக குணமாகும் நோய்கள் என இன்சுரன்ஸ் போடப்படுகின்றன. இதில் நீண்ட கால நோய்களில் இதுபோன்ற கம்பெனிகள் ஆர்வம் காட்டுவதில்லை.

பொது மக்கள் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரும் மேல் தட்டு பிரிவினரும் தனியாரிடம் இன்சுரன்ஸ் கட்டுவதற்கு வசதி இருக்கும் பட்சத்தில் அவர்கள் பொதுத்துறை சுகாதார வசதிகளை தவிர்க்கத் தொடங்கினர் இதுதான் தனியார் இன்சுரன்ஸ் கம்பெனிகள் ஏற்படுத்திய விளைவாகும்.

வணிகமயமாக்கம் 2 வது கட்டம் 

இதனைத்தொடர்ந்து சர்வதேச வளர்ச்சி நிறுவனங்கள் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு சுகாதார சேவைகள் அரசிடமிருந்து படிப்படியாக கைமாற்றப்பட்டன. வெளிநாட்டு நிதியில் இயங்கும் இந்தஅமைப்புகள் நிதி நின்றவுடன் சுகாதார சேவைகளை கைவிட்டன. இதனைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மருத்துவ சேவைகளுக்குள் .நுழைந்தன.

இதனால் முன்னதாக அரசு மக்களுக்கு கட்டணமில்லாமல் அளித்து வந்த சுகாதார சேவைகளுக்கு கட்டணம் கொடுக்க வேண்டிய நிலை உருவானது இதுவே சுகாதார சேவைகள் வணிகமயமாக்கப்படத்தொடங்கிய இரண்டாவது கட்டமாகும். சுகாதார சேவைகள் வணிகமயமாக்கப்பட்டபின்னர் பொதுப்பொறுப்பாக இருந்த மக்களின் சுகாதாரமும் ஆரோக்கியமும் தனி நபர் பொறுப்பாகவும் தனி நபர் பொருளதார சக்திக்குட்பட்டதாகவும் மாற்றப்பட்டது. பொது மருத்துவமனைகள் மருத்துவ பொருட்களுக்கான சந்தைகளாக மாற்றப்பட்டன. நோயாளிகளே தங்களுக்கு தேவையான உணவு செவிலியர் சேவை மருந்துகள் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்திற்கும் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

இதற்கிடையில் சர்வதேச நிதி அமைப்புகள் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நிதி உதவியால் இயங்குகின்ற பலவீனமான நிலையில் உள்ள உலக சுகாதார அமைப்பை தனியாருடன் கூட்டு வைக்க நிர்ப்பந்தப்படுத்தினர். பொது தனியார் கூட்டணி உருவானது. பல நிதி அமைப்புகள் ஒரு மருத்துவமனையை கட்டவும் அதற்கு நிதி அளித்து பராமரிக்கவும் தொட்ங்கினர். இது பல தனியார்கள் நிதி நிறுவனங்கள் கந்து வட்டிக்கடைகக்காரர்கள் கூட பல இடங்களில் மருத்துவமனைகளை நடத்துவதை நோக்கியும் சென்றது.

நிதி மூலதனத்தின் கட்டுபாடு 3வது கட்டம் 

நீர், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகள் அரசிடமிருந்து படிப்படியாக அரசிடமிருந்து தனியாரிடம் மாறியதால் அவை பொது நலனுக்காக என்றிருந்த நிலை மாறி லாபத்திற்காக மட்டுமே செயல்படும் நிலை உருவாகியுள்ளது. கார்டினல் ஹெல்த் கேர் தொடங்கி ஜான்சன் அண்ட் ஜான்சன் சிக்னா பிரிட்ஜ் அகாடமீஸ் மற்றும் சூயஸ் வாட்டர்ஸ் என வரிசையாக பல கார்ப்பரேட் கம்பெனிகள் இறங்கின. இவற்றில் பங்கேற்பாளர்கள் வேறு வழியின்றி தனியார் நிதியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மற்றும் சேவைகள் பரிவர்த்தனை செய்யப்படுவதற்கு நிதி பத்திரங்கள் பங்கு சந்தை பத்திரங்கள் அதை வைத்து கடன் பெறுவதற்கான சான்றிதழ்கள் ஆகியன பயன்படுத்தப்படத் தொடங்கின்.

பெஞ்சமின் ஹண்டர் மற்றும் சூசன் முரே ஆகிய பொருளாதார அறிஞர்கள் கூறுகையில் பொது நிதியானது தனியார் முதலீடுகள் இட வசதியான முறையில் பங்கு சந்தை மூலதனமாக அதவாது பங்கு சந்தை பங்குகளாக மாற்றப்பட்டன. இவை உலகளவில் முதலீட்டாளர்கள் இவற்றை விற்கவும் இவற்றை வர்த்தகம் செய்திடவும் வசதியாக மாறியது. நிதி முதலீட்டு வங்கிகளான கோல்டுமென் சாட்ஸ்(Goldman sachs ) மெரில் லிஞ்ச் ( Merrill lynch) கிரெடிட் சுசி (Credit Suisse ) போன்றவை தனியாகவே தங்களது வங்கிகளில் சுகாதார முதலீடுகளுக்கு தனியாக துறைகளை கொண்டுள்ளன. இவற்றிலுளள நிதி முதலீடு பத்திரங்களை தங்களது வாடியாளர் கம்பெனிகளுக்கு அதாவது மருத்துவமனைகளுக்கு மாற்றிக்கொள்கின்றன. இவ்வகையில் பிரான்சில் அனா கரோலினா கார்டில்ஹாவின் நிதி மூலதனமே அந்நாட்டின் சுகாதாரத் துறையை கட்டுபடுத்துகிறது.

துருக்கி முழுமையுள்ள மருத்துவமனைகளை ஒரு பெரும் சங்கிலியாக இணைத்து நிதி மூலதனமே கட்டுபடுத்துகிறது. இது உலக நாடுகளில் குறிப்பாக வளர்ச்சி அடைந்த நாடுகளான அமெரிக்கா இங்கிலாந்து பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் நிதி மூலதனமே சுகாதாரத்துறையையும் மருத்துவமனைகளையும் கட்டுபடுத்துகிறது.வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் போன்றவற்றில் அனைத்து மருத்துவமனைகளும் அல்ல ஆனால் பெரிய நட்சத்திர அந்தஸ்து கொண்ட மருத்துவமனைகளை நிதி மூலதனமே கட்டுபடுத்துகிறது.

உலகமயமாக்கலின் இன்னொரு பக்க விளைவு அது சர்வதேச வேலைப்பிரிவினை கொண்டுள்ளது. அதாவது ஒரு பொருளானது பல நாடுகளில் தயாரிக்கப்பட்டு ஒரு நாட்டில் அசெம்பிள் செய்யப்பட்டு சந்தைக்கு வருகிறது(உதாரணமாக ஒரு ஆக்ஷன் காலனிகள்) இதேபோன்றே மருந்துகள் மருத்துவ பொருட்கள் உபகரணங்கள் அனைத்தும் பல நாடுகளில் தயாரிக்கப்படுவதால் இதை சார்ந்துள்ள நாடுகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின்றன.

வளர்ச்சி அடைந்த நாடுகளே பெரும்பாலான மருந்துகளை தயாரிப்பதால் அதற்கான காப்புரிமையும் சேர்த்தே மருந்து கட்டணத்தில் உயர்த்தப்படுகிறது. இதற்கேற்ப உலக வர்த்தக அமைப்பின் வர்த்தகம் தொடர்புடைய அறிவு சார் சொத்துரிமை உடன்பாட்டிலும் அனைத்து நாடுகளும் கையெத்திட்டதை தொடர்ந்து மருந்துகளின் கட்டணமானது கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. பங்கு சந்தையில் அந்த மருந்துகளின் பங்குகளின் விலையும் உயர்கின்றது. இதில் சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது ஆனால் மக்களின் உயிருக்கே உலை வைக்கப்படுகிறது. அத்தோடு மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டு அது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கான நிதி குறைக்கப்படுகிறது. 

விக்டர் ராய் என்ற ஆராய்ச்சியாளர் நிதி மூலதனம் மருத்துவ துறையில் குறிப்பாக மருந்துகளின் விலை என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை கூறுகையில் ஹெப்ப பாட்டிஸ் சி என்ற நோய்க்கான மருந்தான சோபோஸ்டிவிர் என்ற மருந்தை கிளீடு சயின்சஸ் என்ற கார்ப்பரேட் மருந்து கம்பெனி 3 மாதங்களுக்கு சாப்பிட வேண்டியதை 90000 டாலர்கள் என விலை நிர்ணயித்துள்ளது இத்தனைக்கும் கிளீடு சயின்சஸ் கம்பெனியின் முதலீடு சிறிய அளவிலானதே. அது பார்மசெட் என்ற சிறிய உயிரியல் தொழில் நுட்ப கம்பெனியை வாங்கியது. அந்த பார்மசெட் கம்பெனியே சோபோஸ்டிவிர் தயாரித்தது. இந்த மருந்து தயாரிப்புக்கான செலவுகளில்  மிகக்குறைவான செலவையே செய்து விட்டு பங்குதாரர்கள் லாபம் அடைவதற்கு கடுமையான விலைககு விற்கிறது.

இதைவிட சிறந்த உதாரணமாக இருப்பது கடுமையான கொரனா அறிகுறிகளுக்கான மருந்தாக உள்ள ரெம்டெசிவிர் 5 நாட்களுக்கானதை 3000 டாலர்களுக்கு விற்கிறது. ஆனால் இதன் விலை 10டாலர்கள்தான் என்று மருந்தியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தடுப்பூசியின் பின்னணி அரசியலும் இதுதான் அவை முழுமையான கிளினிக்கல் பரிசோதனை இன்றி உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் இன்றி சந்தைக்கு வந்துள்ளது. அதனால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு கம்பெனியோ அல்லது அரசோ பொறுப்பேற்காது என்று கூறப்பட்டுள்ளது அப்படியிருந்தாலும் அது மாநிலத்திற்கேற்ப மாறுபட்ட விலைகளில் விற்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாக அளிக்கப்படுகிறது. இது குறித்து முழுமையான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

பொறுப்பற்ற தன்மையினால் இன்று மக்களைக் கொரோனாவிலிருந்து காப்பாற்ற போதுமான அளவு தடுப்பூசி இல்லை. எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் இல்லாமல் ஆறு கோடித் தடுப்பூசி மருந்துகளை ஐம்பது நாடுகளுக்கும் மேல் ஏற்றுமதி செய்ய அனுமத்தித்துள்ளது இந்த அரசு. இப்பொழுது தடுப்பூசி மருந்துக்காக வெளி நாடுகளிடம் கையேந்தி நிற்கிறது. 

இங்கு சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு மருந்தில் 50 விழுக்காட்டை ரூ.150க்குத் தனக்கு விற்க அந்த நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 க்கும் விற்க இந்த அரசு அனுமதித்துள்ளது. ஒரே நாடு, ஒரே வரி என்று கூறி வரும் மோடி அரசு இந்த விசயத்தில் மட்டும் இரட்டை விலைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. அதன் மூலம் ஒரு பக்கம் ஏற்கனவே கொரோனாவின் பாதிப்பால் ஓட்டாண்டியாகிப் போன மாநிலங்களுக்கு மேலும் நிதிச் சுமையைக் கூட்டியுள்ளது. இன்னொரு பக்கம் மக்கள் கொடும் துயரத்தில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும் மருந்து நிறுவனம் மக்களைக் கொள்ளையடிக்க இந்த அரசு வழி வகுத்துள்ளது.

மேலும் அதே நிறுவனம் அமெரிக்க உள்ளிட்ட பல வெளி நாடுகளுக்கு ரூ.300க்கும் அதற்குக் கீழும் கோவிஷீல்டு மருந்தை விற்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் ரூ.400க்கும், ரூ.600க்கும் விற்றுக் கொள்ளையடிக்க இந்த அரசு அனுமதித்துள்ளது. மக்களின் மரண பயத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் அந்த நிறுவனத்திற்கு மத்திய அரசு ரூ.3000 கோடி நிதி உதவியும் வழங்குகிறது. 

மரண பயம் நிலவும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மருத்துவ மனைகளும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் மக்களைக் கொள்ளையடித்து வருகின்றன. ரூ. 1500 மதிப்புள்ள ரெம்டேசிவர் மருந்து இன்று கள்ளச் சந்தையில் ரூ.15000க்கும் அதற்கு மேலும் விற்கப்படுகிறது. சாதாரண மக்கள் இன்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலையில் பரிதவித்து வருகின்றனர்.

தற்போது பில்கேட்ஸ் உள்ளிட்ட பெரும் கார்ப்பரேட்டுகள் கொரனா தடுப்பூசியில் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளனர். இது எப்போது முடியும் என்பது தெரியாது. கொரனா மக்களுக்கு உயிரின் வதை ஆனால் கார்ப்பரேட் மருந்து கம்பெனிகளுக்கோ கொள்ளை லாபம் அடிப்பதற்கான ஒரு வரப்பிரசாதம். முழுமையாகவே கார்ப்பரேட்டுகளின் நிதி மூலதனத்தினாலும் பங்கு சந்தைகளினாலுமே மருத்துவ துறை இயங்குகிறது என்பது வெளிப்படை.

English Summary

Corona and the tragedies of the health sector ..! - Who controls the Corona health system?

Latest Articles

KOLNews