KOLNews

கடலையும், விவசாயத்தையும், காடுகளையும், சுற்றுச்சூழலையும் ஒரு சேர அழிப்பதற்கான அடித்தளமே - EIA 2020 - பாகம் - 3

மெய்.சேது ராமலிங்கம்

மூத்த பத்திரிக்கையாளர்

-----------------------------------------

பொது கருத்துக்கணிப்புக்கு தடை

மேற்கண்ட  ( பாகம் -2 இல் குறிப்பிட்ட ) திட்டங்களிலுள்ள பெரிய தொழிற்திட்டங்களுக்கு பொது கருத்துக்கணிப்பை இஐஏ 2020 தடை செய்கிறது. உதாரணமாக நீர்ப்பாசனம் தேசிய நெடுஞ்சாலைகளை அகலப்படுத்துதல் ரோப்வேக்கள் கட்டிட நிரமாணங்கள் போன்ற திட்டங்கள் ஒரு பகுதியில் செயல்படுத்தப்பட்டால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் இத்திட்டங்களால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பதிவிட முடியாது. இதனால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் குரலைப் பறிக்கும் செயல் என்றே அனைத்து செயல்பாட்டாளர்களும் கண்டனம் தெரிவிக்கின்றனர். இதே போல மற்ற தொழிற்சாலைகள்

EIA Draft 2020: What next for the controversial environment law?

அமைக்கப்படும்போது அதற்காக கருத்து கேட்கப்படும்போது கால அவகாசமானது 30 நாட்களிலிருந்து 20 நாட்களாக குறைக்ககப்பட்டுள்ளது. இதில் முதலாவது அறிக்கை தொழிற்திட்டங்கள் அமையவுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் தாய் மொழியில் கிடைப்பதில்லை ஆங்கிலத்திலோஅல்லது இந்தியிலோதான் கிடைக்கின்றன.கிடைக்கின்ற அறிக்கையை படித்து கிரகித்துக் கொண்டு அந்த பகுதி மக்கள் பங்கேற்பதென்பது சாத்தியமில்லை.

கம்பெனியே அறிக்கை தயாரிக்குமாம்

இரண்டாவதாக கூறப்பட்டுள்ளது மிகுந்த அச்சத்தை அளிப்பதாக உள்ளது.சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை இல்லாமலேயே ஒரு திட்டத்தை தொடங்கவும் ஏற்கனவே உள்ள திட்டத்தை விரிவாக்கவும் செய்யவும் இந்த முன்வரைவு அனுமதி அளிக்கிறது, இதன்படி தொடங்கும் நிறுவனமே சில காலம் குறித்து ஒரு நிபுணர் குழு அமைத்து பாதிப்பு குறித்து அறிக்கை அளிக்குமாம். இது எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை.

கடந்த 2006ம் ஆண்டு முதல் மாநில மற்றும் மத்திய குழுக்கள் என இரண்டு அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் அல்லது அனுமதி பெற வேண்டும் என்று சூழல் இருந்து வந்த நிலையில் அனுமதி பெறாமலேயே எந்த தொழிற்சாலையும் தொடங்கலாம் என்ற நிலை எதிர்காலத்தில் உருவாகும் அபாயமும் உள்ளது. ஒரு திட்டம் தொடங்கும் அதை அனுமதி பெறாமல் தொடங்கினாலும் அந்த கம்பெனியின் முதலாளியே எப்படி தனது நிறுவனத்திற்கு எதிராக ஆய்வு செய்ய குழு அமைப்பார். அந்த திட்டத்தில் இடப்பட்ட பெரும் முதலீட்டுத் தொகை அவர்களின் நேர்மையான முடிவுகளுக்கு இடையூறாக அமையும்.

அனுமதி பெறாமல் தொடங்கினால் ஏற்படும் விளைவுகள்

ஒரு திட்டம் அனுமதி பெறாமல் தொடங்கப்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு நாட்டில் நடந்த விபத்துகளே சான்று.கடந்த மே 7ம்தேதியன்று விசாகப்பட்டினத்திலுள்ள டG பாலிமர் தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயு கசிவால் 11 பேர் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உயிரிழந்தனர், 1000ற்கும மேற்பட்டவர்கள் உடல் பாதிக்கப்பட்டு மோசமான நிலைக்குள்ளானார்கள். இதற்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த ஆலை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்பட்டதே.

Vizag Gas Leak: Company Did Not Have Environmental Clearance, NGT Issues  Notice To LG Polymers Indiaஇதே போல மே 27ல் அசாமின் கிழக்குப்பகுதியிலுள்ள தின்சுகியா மாவட்டத்தில் செயல்பட்ட எண்ணெய் மற்றும் இயற்கைஎரிவாயு கழகத்தின் கிணற்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் படுகாயடைந்தனர். அந்த பகுதியிலுள்ள பல்லுயிர் பெருக்கம் சேதமடைந்தது. இதுவும் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது என்பதே காரணம்.

இது மட்டுமல்ல தொழிற்சாலைகள் ஆண்டுக்கு இரண்டு முறை செயல்பாடுகளை (அதாவது 6 மாதத்திற்கு ஒரு முறை) கண்காணித்து இணக்க அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை மாற்றி ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சமர்ப்பித்தால் போதும் என புதிய வரைவு கூறுகிறது. இது தொழிற்சாலைகள் மீதான ஆய்வுகளையும் அவைநம் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகளையும் அறிந்து கொள்வதற்கான திறனை குறைத்து விடும். மேலும் நீர் ஆதாரங்களின் ஊற்றாக விளங்கும் சதுப்பு நிலக்காடுகளில் மணல் போட்டு சமன்படுத்துவதற்கு அனுமதியோ சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடோ செய்யத் தேவையில்லை என்று கூறப்படுவதும் இந்த வரைவில இடம் பெற்றுள்ளது. இது மட்டுமில்லாமல் வறண்ட புல்வெளிக்காடுகள் தரிசு நிலங்களாக கணக்கில எடுத்துக் கொள்ளப்பட்டு அவற்றை தொழிற்சாலைகளுக்கு திறந்து விடப்படவும் இந்த வரைவு அனுமதி அளிக்கிறது..

மூல உத்திக்கான திட்டங்களுக்க விதிவிலக்கு

மூன்றாவதாக இஐஏ 2020யின் வரம்புக்குட்படாததாக சில துறைகளைச் சேர்ந்த தொழிற்சாலைகளை பட்டியிலிடுகிறது. அவற்றுக்கு மூல உத்தி திட்டமுடையவை என்றுகிறது. இதன் மூலம் எந்த திட்டத்தையும் மூல உத்திக்கானவை என்று கூறி விடலாம். அந்த திட்டங்கள் குறித்த தகவல்கள் பொதுவெளியில் மக்கள் முன் வைக்கப்படாது. இதிலுள்ள பட்டியலில் உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களும் அடங்கும். அது மட்டுமல்ல 150000 சதுர கீமீ வரையிலான கட்டுமான திட்டங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அனுமதி பெற விலக்கு அளிக்கப்படும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன் இநத வரம்பு 20000 சதுர மீட்டர் என இருந்து குறிப்பிடத்தக்கது.

அது போன்று நாட்டின் எல்லையானதும் அதிலிருந்து அதாவது கட்டுபாட்டு பகுதியிலிருந்து 100 கிமீ வரை பாதுகாப்பு சம்பந்தபட்டவையாகவே கருதப்படும்.இந்த பகுதியில் அமைக்கப்படும் எந்த திட்டமும் மூல உத்திக்குள் வந்துவிடும். சர்வதேச உடன்பாடுகளுக்கும் அரசியல் சட்டத்திற்கும் எதிரானதே இஐஏ2020

Draft EIA Notification 2020 Is Out of Sync With State Practices,  International Law – The Leading Solar Magazine In India

இந்தியா ஐநாவின் சுற்றுச்சூழல் உடன்பாடுகளில் பலவற்றில் கையெழுத்திட்டு ஏற்புறுதி செய்துள்ளது. 1992ல் ரியோவில் நடந்த ஐநாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ரியோ தீர்மானத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. பல்லுயிர் பெருக்க உடன்பாடு வனவிலங்கு மற்றும் அழிந்து வரும் உயிரின பாதுகாப்பு பாரீஸ் கால நிலை மாற்ற உடன்பாடு போன்ற எண்ணற்ற உடன்பாடுகளில் கையெழுத்திட்டு ஏற்புறுதி செய்துள்ளது. இப்படிப்பட்ட அனைத்து உடன்பாடுகளுக்கும்சுற்றுச்சூழலையும் முழுமையாக அழிக்கும் இஐஏ2020 எதிரானதாகும்.

உடன்பாடுகளை மீறுவதாகும்,

இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 21 அனைத்து மக்களின் உயிர் வாழும் உரிமையை உறுதி செய்கிறது. ஆனால் இஐஏ 2020 மனித உயிர் வாழும் உரிமையையே கேள்விக்குள்ளாக்குகிறது. நிலைத்த நீடித்த வளர்ச்சியை உறுதி செய்ய கொண்டு வரப்பட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாய சட்டம் 2010ன்படி அமைக்கப்பட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தோடு முற்றிலும் முரண்படுவதாகும்..இஐஏ 2020 ஐ முழுமையாக நிராகரிப்போம்.

English Summary

It is the foundation for the destruction of the sea, agriculture, forests and the environment - EIA 2020 Part - 3

Latest Articles

KOLNews