KOLNews

ஆன் - லைன் வகுப்பு..! - பெற்றோர் படும் அவதிகள்..!

இந்த வருடம் கொரானா தாக்கத்தையடுத்து ஏற்பட்ட சூழல் ,  மாணவர்கள் கல்வி கற்க பள்ளி செல்ல முடியாத நிலையை ஏற்படுத்திவிட்டது.

கொரானா நோய் தொற்ற்று பரவலை தடுக்கும் விதத்தில் பள்ளிகளில் சமூக இடைவெளி விட்டு பிள்ளைகளை உட்கார செய்வது, அவர்களின் கழிப்பறை போன்றவற்றை முறையாக பராமரிப்பது, தும்மல், இருமல் என வந்தால் அது பிறரிடம் தொற்றாமல் பார்த்து கொள்வது, தொடர்ந்து அவர்கள் முகக்கவசுத்துடன் இருப்பது, போன்றவை எல்லாம் நடைமுறை சாத்தியம் இல்லை என்பதை கல்வி நிறுவனங்களும், பெற்றோர்களும் உணர்ந்தே உள்ளனர்.

Online classes for toddlers: Kids unimpressed, parents, teachers ...

ஆகையால் தான்,  சில பள்ளிகளிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பம்னு குறுஞ்செய்தி வந்த போது, என்ன செய்வது ..வேறு வழியில்லை என்கிற மனப்போக்கில், அதற்கு பின் உள்ள சிரமத்தை உணராமல்  பெற்றோரும் அதற்கு ஒத்துப்போயினர். 

ஆனால் அவர்களுக்கு  தற்போது ஏற்படும் சிக்கல் சொல்லி மாளாது. அதுவும் பல வீடுகளில் இரு குழந்தைகள் படிக்கும் நிலையில் உள்ளார்கள். அவர்கள் பாடு திண்டாட்டம் தான்.

ஆரம்பத்தில், கணிணியோ அல்லது சொந்த 'லாப்டாப்'போ இல்லாதவர்கள்  செல்போன்களை வைத்து  சமாளிக்க நினைத்தனர். ஆனால் பள்ளி அனுப்பிய 'டைம் டேபிள்'  வகுப்புகள் காலை எட்டு மணி முதல் மதியம் மூன்று வரை மாறி மாறி வகுப்புகள் உள்ளதாக சொல்லியது.

Outlaw The Teaching Of Coding To Children – YugaParivartanஅத்துடன் இல்லாமல், தொடர்ந்து அடுத்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலையில் பெற்றோர்கள் உள்ளார்கள்.

நாம் வேலைக்கு எப்படி போவது?, திடீரென இரண்டு குழந்தைகளுக்கும் தலா இருபதாயிரம் செலவு செய்து லாப்டாப் வாங்கணுமா?,  சிறிய பிள்ளைகளுக்கு கனெக்ட் பண்ண தெரியுமா? ,அதற்காக அவர்கள் கூடவே இருப்பது சாத்தியமா?, இத்தனை எலக்ட்ரானிக் டிவைசுகளை சார்ஜர்களுடன் குழந்தைகளை நம்பி விட்டுவிட்டு எப்படி தைரியமாக வேலைக்கு செல்வது?, இன்டெர்நெட் வை-பை என அமர்ந்தால் கதிர்வீச்சு பாதிப்பு வராதா?  பாடம் நடக்க நடக்க சார்ஜ் தீரும், ஹெட்செட் கேக்காது, திரையில் ஏதேனும் பாப்அப் தோன்றும்..இவர்கள் கை கால் பட்டு ஏதாவது ஆகும்..இவற்றை சரி செய்ய வேண்டும்.

இவற்றுடன், பாடம் நடக்கையில், வீட்டில் உள்ள தாய்மார்கள் டிவி பார்க்க முடியாது. சத்தம் கேட்பது பிள்ளைகளுக்கு தொந்தரவாக மாறும்.

பெற்றோர்களின் இந்த சிரமங்களை யோசித்து, ஒரு நல்ல தீர்வை அவர்களுக்கு தர கல்வியாளர்கள் முன்வரவேண்டும். 

யோசியுங்கள் கல்வியாளர்கள்..!

English Summary

On - Line Class ..! - Parents in trouble ..!

Latest Articles

KOLNews