KOLNews

ரேச்சல் கார்சனின் மௌன வசந்தம். - இரசாயன தொழிற்சாலைகளுக்கு எதிரான போர் - பாகம் 2

மெய் - சேது ராமலிங்கம் 
---------------------------------------

 

ரேச்சல் கார்சன் தனது மௌன வசந்தத்தில் பூச்சிக் கொல்லிகளை தான் ஆராய்ந்ததை உலகின் கண்களுக்கு கொண்டு வந்தார். இன்றைய சூழல் நெருக்கடியை அன்றைக்கே தொலைநோக்கடன் தெரிவித்தார். 

உலகையே குலுக்கிய பூச்சி கொல்லிகள் குறித்த அவரது ஆய்விலிருந்து சில பகுதிகளை இங்கு தருகிறோம்.

1940ற்கு பின்னர்தான் கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான நச்சுப்பொருட்களை ரசாயனத் தொழிற்சாலை முதலாளிகள் உருவாக்கி விட்டனர். பூச்சிகள்,எலிகள்,களைகள் காளான்கள் என்று மட்டுமில்லாமல் தொல்லை தராத விவசாயத்திற்கு ஆதரவாக உள்ள பூச்சிகளையும் ,பல்வகை உயிரினங்களையும் நுண்ணுயிரிகளையும் இந்த பூச்சிக் கொல்லி மருந்துகள் அழித்து விட்டன.

ஒரு சிலர் பூச்சியினங்களே இல்லாதிருந்தால் விவசாய உற்பத்தி கூடும் என்று கேட்கக்கூடும். ஆனால் உண்மை அதற்கு மாறானதாகும். 

பூச்சி இனங்கள் இல்லாமல் போனால் மகரந்த சேர்க்கை நடைபெறாது, அதனால் பயறுவகை செடிகள் அழிந்து விடும். செடிகளே இல்லாவிட்டால் இயற்கையிலுள்ள நைட்ரஐன் சுழற்சி அறுந்து போய் விடும். இவ்விடத்தில் நைட்ரஐன் சுழற்சி என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நைட்ரஐன் அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமானதாகும். ஆனால் இயற்கையிலிருந்து கிடைக்கும் நைட்ரஐனை உயிரினங்கள் அப்படியே எடுத்து பயன்படுத்த முடியாது. அவை தங்களுக்கு தேவையான நைட்ரஐனை பெற தாவரங்களையே அவை நம்பியுள்ளன. தாவரங்களுக்கு நைட்ரஐன் மண்ணிலிருந்து கிடைக்கிறது.

Soil carbon is a valuable resource, but all soil carbon is not created equalபயறு வகை செடிகளின் வேர்களில் வில்லைகள் போன்று உள்ளவைற்றில் நுண்ணுயிரிகள் இயற்கையிலுள்ள நைட்ரஐனை சத்தாக மாற்றி தாவரங்களுக்கு அளிக்கின்றன. தாவரங்களின் காலம் முடிந்தவுடன் அவை மண்ணுக்கே செல்கின்றன. இன்னொரு புதிய தாவரமானது அதை பயன்படுத்துகிறது. இது தொடர்ந்து ஒரு சுழற்சியாக நடைபெறுகிறது. இதையே நைட்ரஐன் சுழற்சி என்கிறோம்.

பூச்சிகளும் நுண்ணுயிரிகளும் மண்ணின் மேலும் கீழும் இடம்பெயர்ந்து மண் தளர்த்தப்பட்டு தாவரங்களின் வேருக்கு காற்றும் நீரும் கிடைக்கச் செய்கின்றன. இப்பூச்சிகளும் நுண்ணுயிரிகளும் இல்லாமல் மண் தனது சத்தை இழந்து எந்த தாவரங்களும் பயன்படாமல் போகின்றது.

சுருக்கமாகவும் தொகுப்பாகவும் கூறவேண்டுமானால் பூக்சி இனங்கள் இல்லையெனில் இப்பூவுலகில சூழலியற் சமச்சீர்மை கடுமையாக பாதிக்கப்படும்.  தற்போது இந்த பாதிப்பை ஏற்படுத்தி வசந்தத்தை மௌனிக்க வைத்தது பூச்சிக் கொல்லிகளே.

Insecticides Manufacturer - Are Natural Insecticides Safe Around People And  Pets?

தற்போது பூச்சி கொல்லிகளின் வகைகளை கரண்போம்.

பூச்சிக் கொல்லிகளை முக்கியமான இரு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று குளோரினேட் செய்யப்பட்ட ஹைட்ரோ கார்பன் (CH ) டி.டி.டி (Degenerative disc disease )இனத்தை சேர்ந்தது. இரண்டாவது ஆர்கனோ பாஸ்பரஸ் பார்த்தியோன் மாலத்தியோன் ஆகியன இதைச் சார்ந்தது. 1874ல் கண்டுபிடிக்கப்பட்ட டி.டி.டி 1939ல் தான் ஒரு பூச்சிக் கொல்லியாக அங்கீகரிக்கப்பட்டது. பூச்சிக் கொல்லிகளில் இதற்கு நிகர் எதுவம் கிடையாது. இதில் மறைந்துள்ள அபாயம் என்னவென்பது பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியாது

இது நமது தோல் வழியாக எளிதாக உடலுக்குள் செல்லக்கூடியது. வாய்வழியாக சென்றால் நுரையீரலைத் தாக்கும். உடலுக்குள் புகுந்தால் நாளமில்லாச் சரப்பிகளான அட்ரினல்,தைராய்டு சுரப்பிகளையும் சிறுநீரகத்தையும் சென்றடையும். அங்கேயே சேமிக்கப்பட்டு உடலில் பல சேதங்களை உருவாக்கும்.

டி.டி.டி மற்றொரு வழியிலும் உயிரினங்களை சென்றடைகிறது. அதாவது பறவைகளுக்கும் உணவுச்சங்கிலி வழியாக இது பிற உயிரினங்களையும் சென்றடைகிறது. டிடிடி தெளிக்கப்பட்ட கிராம்புச் செடியை உண்ணும் கோழிகள் மூலமாக இது கோழி முட்டையை சென்றடைகிறது. நெற்பயிர்களில் தெளிக்கப்படும் டிடிடி வைக்கோல் மூலமாக பசுக்களுக்கும் அவற்றிலிருந்து பாலுக்கும் வெண்ணெய்க்கும் பரவுகிறது. இதில் அச்சுறுத்தும் விசயம் என்னவெனில் வைக்கோலிருந்து வெண்ணெய்க்குள் வருவதற்குள் அதன் அடர்த்தி பெருகி விடுகிறது. பாலில் 3 பி.பி.எம் (Parts Per Million ) அளவு இருக்கும் டிடிடி வெண்ணெயை அடையும்போது 65 பிபிஎம் ஆக உயர்ந்து விடுகிறது.

டிடிடி ஆனது நீர் நிலைகளிலும் உள்ள நீரிலும் நிலத்தடி நீரினுள்ளும் கலந்து விட்டது என்பதே பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்த விசயமாகும். நிலத்தடி நீரினுள் உள்ள பூச்சி கொல்லி இளநீரிலும் அவ்வளவு ஏன் மனித உடலில் புகுந்து தாய்ப்பாலிலும் கலந்து விட்டது என்பது அதிர்ச்சிக்குரிய விசயமாகும்.

இதெல்லாம் விட தரையை சுத்தப்படுத்துவதாக நாம் பயன்படுத்தும் சுத்திகரிப்பு ரசாயனங்களிலும் மேஐகளையும் சோபா அமர்வு மற்றும் சொகுசு நாற்காலிகளிலும் ஐன்னல் திரைகளிலும் சுத்தப்படுத்துவதில் பயன்படுத்தப்படும் கிளீனர்களிலும் பூச்சிகொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை அன்றாடம் மனித உடலிலும் கால்நடைகள் வளர்ப்பு பிராணிகள் மற்றும் பறவைகள் ஆகியவற்றின் உடல்களில்ஊடுருவிக் கொண்டே இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கது.

இது குறித்து ரேச்சல் நாம் லாபங்களில் அக்கறை கொண்டகடவுள்களினால் ஆளப்படுகிறோம் என்றார். அதுமட்டுமின்றி நாம் பூச்சிக்கொல்லிகளை தயாரிக்கும் தொழிற்சாலைகள் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக ஒரு யுத்தமே நடத்த வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார். அந்த நாளுக்கு நாம் எப்போது தயாராவோம்.

English Summary

Rachel Carson's Silent Spring. - The War Against the Chemical Factories - Part 2

Latest Articles

KOLNews