KOLNews

மறக்கடிக்கப்பட்ட விவசாயிகளின் வரலாறு காணாத போராட்டம் - பாகம் - 1

மெய். சேதுராமலிங்கம்

--------------------------------------

கடந்த 2020 ஆகஸ்ட் 9ம்தேதி தொடங்கிய விவசாயிகளின் தீரமிக்க போராட்டம் ஓராண்டை நெருங்கி விட்டது. கடந்த ஓராண்டாக டெல்லியின் கடுங்குளிரிலும் வெயிலும் நடந்து வரும் போராட்டத்தில் இதுவரை 248பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

இந்திய ஒன்றிய அரசின் 3 விவசாய சட்டங்களை எதிர்த்து அவற்றை திரும்ப பெறும் வரை ஓயாது எந்த சமரசமும் இன்றி போராட்டம் டெல்லியின் சாலைகளில் நடந்து வருகிறது. ஆனால் டெல்லி விவசாயிகளின் இதுவரை இந்திய வரலாற்றிலேயே இல்லாத நீண்ட கால வீரமிக்க போராட்டத்தை வழக்கம் போல மீடியாக்கள் இருட்டிப்ப செய்து வருகின்றன. 

Nawidunia - Kul Sansar Ek Parivar

ஏன் விவசாயிகள்  ஓராண்டு காலமாக போராடி வருகின்றனர் 

இதை புரிந்து கொள்ள வேண்டுமானால் நாட்டின் நீண்ட கால பட்டினிச்சாவகளிலிருந்தேதொடங்க வேண்டும்.

இன்றைய தலைமுறையினருக்கு நாட்டின் பட்டினிச்சாவுகளின் வரலாறு பற்றி தெரியாது. தற்போது இயற்றப்பட்டுள்ள விவசாய சட்டங்களினால் அந்த நிலைமையை மீண்டும் கொண்டு வரும் நாள்

வெகு தொலைவில் இல்லை.. அந்த சட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் முன்னர் நடந்த அதிர்ச்சிகரமான வரலாற்றுக்கு திரும்புவோம். பிழைத்தவர்கள் பிணங்களை தின்ற நிகழ்வுகள்

இந்திய வரலாற்றில் வறட்சி உணவுப்பஞ்சம் புதிதல்ல.1757லிருந்து1947 வரை நடந்த 4 பெரும் பஞ்சங்களில் ஏற்பட்ட பட்டினிச்சாவுகள் 4 கோடியே 30 லட்சம் பேராகும். இதில் பெரும்பாலும பிரிட்டிஷாரின் தவறான கொள்கைகளால் ஏற்பட்டதே ஆகும்.

1765ல் வர்த்தகம் செய்வதாகக்கூறி இந்தியாவிற்குள் நுழைந்த கிழக்கிந்திய கம்பெனி மக்களிடம் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றது. மிக அதிகமாக வரி வசூலிக்கும் பேராசையினால் வரி படிப்படியாக ஏற்றப்பட்டு 10 விழுக்காட்டை நெருங்கியது. அப்போது கடுமையான உணவுப்பஞ்சம் நிலவியது.1770 களில் இந்தியாவில் முதல் கவர்னர் ஐனரலாக பதவி ஏற்ற வாரன் ஹேஸ்டிங்ஸ் போட்ட சட்டம்தான் அனைத்திற்கும் மூல காரணமாக அமைந்தது.

Hastings House dwarfed - Telegraph Indiaஇந்த சட்டத்தின்படி விளைச்சலை மூன்று பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை கம்பெனிக்கும் ஒரு பங்ளை வரி வசூலிக்கும் ஐமீன்தாருக்கும் மூன்றாவது பங்கை உழுது விளைத்து அறுவடை செய்த உழவருக்கு வசூலித்து கொள்ள வேண்டும். 1880ல் பஞ்சத்தின் தன்மை குறித்து ஆங்கிலேயர் அண்ட்டா என்பவர் எழுதி வைத்திருப்பவற்றை படித்தால் இப்போது கூட நெஞ்சம் பதறுகிறது

வங்காளத்தில் உழவர்கள் மாடு,கலப்பை, மண்வெட்டி ஆகியவற்றை விற்று விட்டார்கள் விதை நெல்லை குற்றி உலையிட்டார்கள் மகனை மகளை விற்றார்கள் வாங்குவதற்கு ஆள் இல்லை என்றாகும் வரை விற்றார்கள். பிழைத்திருந்தவர்கள் பிணங்களை தின்றார்கள், செத்தவர்களை புதைக்கவோ ஆளில்லை. நாய், நரி மற்றும் கழுகு தின்று தீர்க்க முடியாத அளவுக்கு பிணங்கள் சாலையெங்கும் குவிந்த கிடந்தன ( பார்க்க இந்திய உழவாண்மை வளர்ச்சி வரலாறு)

The Bengal Famine of 1943: How the British Engineered One of the Worst  Genocides in the Human History - Let Us All Work For the Greatness Of India

இதற்கு பின்னரும் பிரிட்டிஷ அரசு வரி மூலமாக கொள்ளையடிப்பதை விட்டு வைக்கவிலலை அதன் கொள்ளையடிப்பு கொள்கைகள் தொடர்ந்ததால் பஞ்சங்களும் பட்டினிச்சாவுகளும் அதிகரித்து வந்தன, இதனால் உலகளவில் பிரிட்டிஷ் அரசக்க கன்டனஙகள் எழுந்ததன் விளைவாக காலனி ஆடசி நிர்வாக ஆட்சி

முறை மாறியது அவர்கள் பட்டினிச்சாவுகளை தடுத்திடும் திட்டமாகவே பொது விநியோக முறையை உணவுத்தானிய கிட்டங்கிகளை ஏற்படுத்தின. இதனைத் தொர்ந்தே ரேசன் கடைகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டு மக்களின் பட்டினியை குறைத்தன.

English Summary

The Forgotten Unprecedented Struggle of Farmers - Part - 1

Latest Articles

KOLNews