KOLNews

மறக்கடிக்கப்பட்ட விவசாயிகளின் வரலாறு காணாத போராட்டம் - பாகம் -4

மெய். சேதுராமலிங்கம்
-------------------------------------

இதை விட முக்கியமாக நமது நாட்டில் சட்டத்தில் இடம் பெறுவதே அமல்படுத்தப்படுவதில்லை. அப்படியிருக்க சட்டத்திலேயே இல்லாத அரசு கொள்முதலும் குறைந்த பட்ச ஆதரவு விலையும் எப்படி நீடிக்கும் என்பதை நம்ப முடியும். அது அப்பட்டமான பொய் என்பதற்கு சட்டமே ஆதாரம். மேலும் கொள்முதலும் குறைந்த பட்ச ஆதரவு விலையும் இல்லாத பட்சத்தில் கார்ப்பரேட்டுகளே விலையை நிர்ணயிப்பார்கள். உதாரணமாக தஞ்சையில் நெல் அதிகமான விளைச்சல் ஏற்பட்டால் கார்ப்பரேட்டுகள் சிண்டிகேட் அல்லது கார்ட்டல் குழு அமைத்துக்கொண்டு அடிமாட்டு விலைக்கு வாங்குவார்கள். விவசாயிகளுக்கு வேறு வழியிருக்காது.

5 IoT Applications in Agriculture Industry | Smart Farming Solutions

ஆன்லைன் வர்த்தகத்திற்கு அனுமதி அபாயகரமானது என்னவெனில் ஆன்லைன் வர்த்தகத்திற்கு வழி வகைசெய்யப்பட்டுள்ளதாக கூறுகிறது. எந்த மாநிலத்திலிருந்து நாட்டிலிருந்து எந்த உணவுப்பொருட்களையும் வாங்க முடியும். அப்படியென்றால் விவசாயிகளுக்கு எந்த சந்தையில் விற்க முடியும். இன்னுமொரு தாக்குதலாக விவசாயி என்ற வரையறையில் யார வேண்டுமானாலும் உள்ளே வரலாம். இதில் முன்னதாக குறிப்பிட்ட அம்பானி அதானி உணவு உற்பத்தியில் நுழைந்துள்ளார்கள் என்பதையும் இணைத்து பார்க்க வேண்டும்.

‘எனவே உலக வர்த்தக அமைப்பின் வலியுறுத்தலுக்கேற்ப அதன் இறுதி இலக்காக ரேசன் கடைகளும் மூடப்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். அதன் விளைவாக நாடு முழுவதும் பட்டினிச்சாவுகள் நிகழுவதை தவிர்க்க இயலாது..

Methi Paratha Recipe, How to make Methi Paratha - Ruchiskitchenஇனி கஞ்கிக்கு வெங்காயம்கூட காஸ்ட்லிதான் திருத்தப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் வெங்காயம்,உருளை, எண்ணெய்வித்துக்கள் உள்ளிட்ட பல பொருட்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டன.இதற்கு காரணமாக இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட அன்றைய காலத்தில் உணவுப் பொருட்களுக்கு தட்டுபாடு நிலவியது. அப்போதிருந்த நிலைமைகளில் கொண்டுவரப்பட்ட சட்டம் தற்போதைய மிக அதிகமான உற்பத்தி இருப்பதால் பொருந்தாது.

உண்மையில் இந்த வாதமே அபத்தமானதாகும். அதிகமான உணவு பொருள் உற்பத்திக்கம் இச்சட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஏனெனில் சட்டம் கொண்டு வரப்பட்டதே அத்தியாவசியப் பொருட்களின் விலையை கட்டுபடுத்துவதற்காகத்தான். அவற்றை பதுக்குவதையும் கள்ள சந்தையையும் தடுப்பதற்குதான்.

இதனால்தான் வெங்காயம் உருளைக்கிழங்கு எண்ணெய் வித்துகள் போன்றவற்றின் விலைகள் கட்டுபாட்டில் இருந்தன. சற்று விலை ஏறினால் மிக அதிகமாக எகிறியதில்லை. மீண்டும் பழைய விலைக்கு திரும்பி விடுவதும் இந்த சட்டத்தினால்தான். 

இவற்றை பதுக்கவும் குற்றமாக இருந்ததால் விலைகள் கட்டுக்குள் இருந்தன, தற்போது அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிருந்து நீக்கப்பட்டதோடு அந்த உணவுப்பொருட்களை சேமித்து(பதுக்கி வைத்துக்கொள்ள) இருந்த தடை நீக்கப்பட்டது, பதுக்கி வைத்துக்கொள்வதற்கான உச்ச வரம்பும் கிடையாது. எனவே முதலாளிகளும் பெரு வணிகர்களும் அவர்களுக்கே உரிய பாணியில் எந்த மாவட்டத்தில் மாநிலத்தில் குறைவான விலைக்கு கிடைக்கிறதோ அங்கு அதிகமான அளவில் வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு எங்கு தேவை அதிகமாக உள்ளதோ அங்கு அதிகமான விலைக்கு விற்க முடியும். அதுமட்டுமின்றி பஞ்சம் போர் மற்றும் பெரும் தொற்று போன்ற காலங்களில் அத்தியாவசியப் பொருட்கள் பதுக்கி வைத்துக்கொள்வது விதி விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது, ஆனால் அப்போதும் பதுக்கலுக்கு தடை விதிக்கப்படாது என்பதுதான் முக்கியமான விசயம்.

5,200 Bags Of PDS Rice Seized From Two Private Mills In Punjabபதுகக்லுக்கு தடை நீக்கப்படுவதாலும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிருந்து நீக்கப்படுவதாலும் தனியார் மற்றும் கார்ப்பரேட்டுகள் இந்த துறையில் முதலீடுகள் செய்ய முன் வருவார்கள் என்றும் அந்நிய நேரடி முதலீடுகள் பெருகும் என்று வெளிப்படையாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் தென் மாநிலங்களிலும் ஏழை எளிய மக்கள் கஞ்சிக்கு சின்ன வெங்காயத்தை கடித்து கொள்வார்கள் அதே போன்று வட மாநிலங்களில் சப்பாத்திக்கு உருளைக்கிழங்கையோ அல்லது வெங்காயம் பச்ச மிளகாயையோ தொட்டு கொண்டு சாப்பிடுவார்கள். தற்போது அதுவும் அவர்களுக்க எட்டாக்கனியாகிவிட்டது என்பதுதான் வேதனையான விசயம். இதை எப்படி மோடி அரசுக்க புரிய வைப்பது.

English Summary

The Forgotten Unprecedented Struggle of Farmers - Part - 4

Latest Articles

KOLNews