KOLNews

மறக்கடிக்கப்பட்ட விவசாயிகளின் வரலாறு காணாத போராட்டம் - பாகம் - 5

மெய். சேதுராமலிங்கம்
-------------------------------------

விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம மற்றும் வேளாண்மை சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசர சட்டம் அல்லது சுருக்கமாக கூறினால் ஒப்பந்த விவசாய சட்டம்

உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில் ஒப்பந்த விவசாயம் குறித்து உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெபத்திட்டிருந்தது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது ஒப்பந்த விவசயாம் குறித்து கடுமையான எதிர்ப்பும் விவாதங்களும் நடந்தன.

Manmohan Singh writes to PM Modi to 'ramp up' COVID-19 vaccination - The  Weekஇதனைத்தொடர்ந்து மோடி அரசு2018லேயே இந்த சட்டத்தை தயாரித்து வைத்து அமல்படுத்துவதற்கான தருணத்திற்கு காத்திருந்தது. ஆனால் இந்தயாவிலேயே தமிழகத்தில்தான் (கடந்த ஆண்டே) ஒப்பந்த சாகுபடி சட்டத்தை எடப்பாடி அரசு அமல்படுத்தி விட்டது. ஆனால் இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. தற்போது மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சட்டத்தின்படி நிலம் மட்மே விவசாயிகளுடையது மற்ற விதை,உரம் பூச்சி கொல்லி உள்ளிட்ட மற்ற இடு பொருட்கள் முதலீடு ஆகிய அனைத்தையும் கம்பெனி அளிக்கும். ஒப்பந்தம் போடும் போதே விளை பொருட்களின் விலையானது அன்றைய சந்தை விலையையொட்டி சற்று குறைவாகவே கம்பெனி முடிவு செய்யும். 

எந்த பயிரை பயிரிட வேண்டும் என்ன தரத்தில் இருக்க வேண்டும் என்ன காலத்தில் விளைச்சலை கம்பெனியிடம் அளிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளுடன் இரு தரப்பினரும் ஒப்பந்தம் போட்டு கொள்வார்கள். இயற்கை பேரிடர்கள் அல்லது பயிர்களின் தோல்வி போன்ற ஏதோ காரணங்களால் விவசாயி குறிப்பிட்ட தரத்தில் காலத்தில் விளை பொருட்களை கம்பெனிக்கு தர முடியாவிட்டால் கம்பெனி க்கு அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். 

இந்த ஒப்பந்த விவசாயத்தில் யாருமே தப்பிக்க முடியாது. 

ஒரு கிராமத்தில் இருவர் ஒப்பந்த விவசாயம் செய்தால் கூட மற்றவர்களும் இதற்கு உட்பட்டே ஆக வேண்டும். பசுமைப்புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு கிராமத்தில் ஒரே மாதிரி பயிர்களை பயிரிட நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

Land bill amendments: If only farmers were idiots

தற்போது மத்திய அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் சட்டத்தின்படி நிலம் மட்மே விவசாயிகளுடையது மற்ற விதை,உரம் பூச்சி கொல்லி உள்ளிட்ட மற்ற இடு பொருட்கள் முதலீடு ஆகிய அனைத்தையும் கம்பெனி அளிக்கும். ஒப்பந்தம் போடும் போதே விளை பொருட்களின்விலையானது அன்றைய சந்தை விலையையொட்டி சற்று குறைவாகவே கம்பெனி முடிவு செய்யும். எந்த பயிரை பயிரிட வேண்டும் என்ன தரத்தில் இருக்க வேண்டும் என்ன காலத்தில் விளைச்சலை கம்பெனியிடம் அளிக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகளுடன் இரு தரப்பினரும் ஒப்பந்தம் போட்டு கொள்வார்கள். இயற்கை பேரிடர்கள் அல்லது பயிர்களின் தோல்வி போன்ற ஏதோ காரணங்களால் விவசாயி குறிப்பிட்ட தரத்தில் காலத்தில் விளை பொருட்களை கம்பெனிக்கு தர முடியாவிட்டால் கம்பெனி க்கு அந்த நிலத்தை குத்தகைக்கு எடுத்துக்கொள்ளலாம். இந்த ஒப்பந்த விவசாயத்தில் யாருமே தப்பிக்க முடியாது. ஒரு கிராமத்தில் இருவர் ஒப்பந்த விவசாயம் செய்தால் கூட மற்றவர்களும் இதற்கு உட்பட்டே ஆக வேண்டும். பசுமைப்புரட்சி அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒரு கிராமத்தில் ஒரே மாதிரி பயிர்களை பயிரிட நிர்ப்பந்திக்கப்பட்டனர்

ஒப்பந்தம் மீறப்பட்டால் போராட முடியுமா ?

ஒப்பந்த விவசாயத்தில் ஒப்பந்த்தை கம்பெனி மீறினால் பிரம்மாண்டமான கார்ப்பரேட்டுகளை எதிர்த்து சட்ட ரீதியாக ஒரு சிறு விவசாயினால் போராட முடியுமா என்றால் நிச்சயமா முடியாது. ஒப்பந்த விவசாயத்தில் படிப்படியாக நிலத்தை மட்டுமே வைத்திருக்கும் விவசாயி கடைசியில் அதையும் பறி கொடுக்கும் நிலை ஏற்படலாம். அப்படிஏற்படாவிட்டாலும் கார்ப்பரேட்டுகளின் முன்பணத்தை பெற்றுக் கொள்ளும் விவசாயி கம்பெனியின் நிபந்தனைகளை வேறு வரியின்றி ஏற்றுக் கொண்டு கொத்தடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவர்.

ஒப்பந்த விவசாயம் சில அனுபவங்கள்

தமிழகத்தில் முன்னரே ஒப்பந்த விவசாயம் தொடங்கி விட்டது கரும்பும் மக்காச்சோளமும் ‘சர்க்கரை ஆலைகளிடம் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் விவசாயம் நடைபெற்றன. சர்க்கரை ஆலைகளிடம் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் கரும்பை கொடுத்த 15 நாட்களுக்குள் அதற்கான விலையை கரும்பு விவசாயிகளிடம் ஆலை அளிக்க வேண்டும். ஒப்பந்த்தின்படி 15 நாட்களுக்கு மேல் ஒரு நாள் தாமதமானாலும் ஆலை விவசாயிக்கு வட்டியுடன் கொகையை அளிக்கவேண்டும். ஆனால் 15 மாதங்களாகியும் இதுவரை ஆலை முதலாளிகள் விவசாயிகளுக்கு தொகையை அளிக்கவில்லை. இதுவரை கடந்த 2018லிருந்து 19 வரையில் தமிழக கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கித் தொகை 1834 கோடியாகும். இந்திய அளவில் 15000 கோடியை ஆலை முதலாளிகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டும். ஆனால் எத்தனையோ வழக்கு போட்டும் போராட்டம் நடத்தியும் ஒன்றும் செய்ய முடியவில்லை. உள்ளுர் முதலாளிகளையே ஒன்றும் செய்ய முடியாத இந்திய அரசு ஒப்பந்த்தை மீறினால் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளை என்ன செய்து விட முடியும்? இதுதான் ஒப்பந்த விவசாயம். படிப்படியாக நமது விவசாயிகள் நிலத்தையும் பறி கொடுத்துவிட்டு விவசாயத்தை விட்டு வெளியேறுவார்கள் என்பதே நடக்கப்போகிறது.

Explainer: Are farm bills game-changer or anti-farmer?தற்கொலைகள் பல மடங்காகும்

ஏற்கனவே நமது விவசாயிகள் கடன் சுமை தாங்காது தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்திய குற்றங்கள் ஆவணப்படுத்தும் அமைப்பின் தகவலின்படி கடந்த 2017லிருந்து 19 வரை ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 விவசாயிகள் தற்கொலை செயது கொண்டுள்ளனர் என்று கூறுகிறது. இந்த சட்டங்களினால்

விவசாயிகளின் தற்கொலைகள் பல மடங்காகும்.

இந்த மூன்று விவசாய சட்ட்ங்களும் விவசாயத்தை அழித்து உணவு பாதுகாப்பையே கேள்ளிக்குள்ளாக்கும். நாடு வரலாறு காணாத பஞ்சத்தை எதிர்கொள்ளும். ரேசன் கடையை நம்பி வாழும் மக்கள் அவை மூடப்பட்டால் தற்கொலைகளும் பட்டினிச்சாவுகளும் அதிகரிக்கும் அவற்றை மவுனமாக காணப்போகிறமோ?

English Summary

The Forgotten Unprecedented Struggle of Farmers - Part - 5

Latest Articles

KOLNews