KOLNews

மறக்கடிக்கப்பட்ட விவசாயிகளின் வரலாறு காணாத போராட்டம் - பாகம் -3

மெய். சேதுராமலிங்கம்

---------------------------------------

பின்னணி அரசியல்

உலகிலேயே சீனத்திற்கு அடுத்தபடியான மிகப்பெரிய உணவுப்பொருட்களுக்கானசந்தை இந்தியாதான். 130 கோடி மக்களுக்கான உணவுத்தேவைகளை விவசாயமே பூர்த்தி செய்கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 85 விழுக்காடு சிறுகுறு விவசாயிகள் ஆகும். 13 விழுக்காட்டினர் நடுத்தர விவசாயிகள் ஆகும். இந்த 98

விழுக்காட்டினரே நாட்டு மக்கள் அனைவருக்கும் உணவு அளிக்கின்றனர் இந்த பெரும் சந்தையை கைப்பற்ற பல ஆண்டுகளாகவே கார்ப்பரேட்டுகள் துடித்து கொண்டிருந்தனர். தற்போதுதான் அந்த வாய்ப்பு மோடி அரசின் மூலமாக முழுமையாக கிடைத்திருக்கிறது.

இன்னொரு பக்கம் உலக வர்த்தக அமைப்பானது நீண்ட காலமாகவே விவசாயத்திற்கு அளிக்கப்படும் மானியங்களையும் ரத்து செய்ய வேண்டும் அரசு கொள்முதல் செய்வது அத்தியாவசியப்பொருட்கள் பட்டியலிருந்து பல பொருட்களை நீக்க வேண்டும் மற்றும் உணவுப் பொருட்களுக்கான விலைக் கட்டுபாட்டை நீக்க வேண்டும் என்று வற்பறுத்தி வந்தது. ஆரம்பத்தில் விவசாயத்திற்கு அளிக்கப்படும் மானியத்தை ரத்து செய்ய முடியாது என்று வந்த முநதைய காங்கிரஸ் அரசும் தற்போதைய பாஐக அரசும் வாதிட்டு வந்தன. இந்த நாடகம் முடிவுக்கு வந்த உலக வர்த்தக அமைப்பின் வேளாண்மை ஒப்பந்தப்படி முழுமையாகவே மோடி அரசு அடி பணிந்து விட்டது.

64.4% Believe Corporates Benefited Economically from Modi Govt's Works |  Clarion Indiaஇரண்டாவது அம்பானியும் அதானியும் உணவு உற்பத்தி மற்றும் உணவுத் துறையில் நுழைந்துள்ளனர் என்பதையும் இணைத்து பார்த்து இநத சட்டங்களின் பின்னணியை புரிந்து கொள்ளலாம்.

வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம்

முதலாவது வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் குறித்து பரிசீலிப்போம். மத்திய அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களையும் இடைத்தரகர்களையும் ஏதோ கொடூரமானவில்லன்களைப்போல சித்தரிக்கின்றன. உண்மையில் என்ன நிலைமை இதுவரை இருந்த வந்துள்ளது.

அரசு வேளாண் விளைபொருள் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டதே விவசாய உற்பத்தியையும விவசாயிகளையும் ஒரளாவாவது பாதுகாப்பதற்குதான். மொத்தம் உள்ள 24 விவசாய உற்பத்திப் பொருட்களில் அரசு நெல்,கோதுமை சில மாநிலங்களில் கரும்பு மற்றும் பருத்தியையும் அரசு கொள்முதல் செய்கிறது. அதிலும் நெல் மற்றும் கோதுமையில் மூன்றில் ஒரு பங்குதான் அரசு கொள்முதல் செய்கிறது. இவற்றையும் மீதமுள்ள விளைபொருட்கள் அனைத்தையும் சேர்த்து கொள்முதல் கூடங்களுக்கு வெளியேதான் விவசாயிகள் ஒழுங்குமுறை கூடங்கள் மூலமாக இடைத்தரகர்களிடம் விற்றுவருகிறார்கள். உரிமம் பெற்ற இடைத்தரகர்களும் விற்பனைக்கூடங்களிலுமே விற்பனையிலும் வாங்குவதிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் இடைத்தரகர்கள் வைத்ததே விலையாக இருந்தது விவசாயிகளுக்கு இடு பொருட்கள் செலவு உள்ளிட்ட சொந்த குடும்ப தேவைகளுக்கும் அவர்கள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் தனியார் விற்பனைக் கூடங்கள் மற்றும் இடைத்தரகளிடமே பணத்தேவைகளுக்கு கடன் பெறுவதும் அன்றாட நடைமுறையாக இருந்து வந்தது. கடன் பெற்றவர்களிடமே அவர்கள் தங்களது வயலில் விளைந்ததை

விற்பதுமே வழக்கமாக இருந்து வந்தது. தற்போது இந்த இடைத்தரகர் முறையையும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களையும் ஒழித்து கட்டியுள்ளது உண்மையில் விவசாயிகளுக்கு கடன் வசதிகள் தருவதற்கான எற்பாட்டை மோடி அரசு செய்திருக்க வேண்டும். இருக்கின்ற ஏற்பாடுகளையும் ஒழித்து கடடிவிடுகிறது, வங்கிகளும் விவசாயிகளுக்கு கடன் தர இயலாத நிலையில் விவசாயிகளுக்கு யார் கடன் தருவார்கள்?.

M.S. Swaminathan Commission (Agriculture) - IAS4Sure

சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகள்

அடுத்ததாக சுவாமி நாதன் கமிட்டி கொள்மதல் விலையை உயர்த்தி 50 விழுக்காடு விவசாயிகளுக்க லாபம் வரும்படி அளிக்க  வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. அதன்படி 1 குவிண்டால் நெல்லுக்கு ரூ2528 ஆகிறது ஆனால் மோடி அரசு முன்னதாக அளித்ததோ ரூ1815 தான் இதனால் விவசாயிகளுக்கு நட்டமானது ரூ612 ஆகும். தற்போது ஒட்டு மொத்த கொள்முதலையே சட்டத்தில் இல்லாமல் நீக்கி விட்டு குறைந்த கொள்முதல் நீடிக்கும் என்று வழக்கம்போல் வாயால் வடை சுடுகிறார் மோடி. குறைந்த பட்ச ஆதரவு விலையை உலக வர்த்தக அமைப்பு நிர்ப்பந்தித்தது போன்று அதை புதிதாக இயற்றப்பட்ட சட்ட்த்தில் இலலாமல் செய்து விட்டது. உண்மையில் அரசு கொள்முதலும் குறைந்த பட்ச ஆதரவு விலையும் எதற்காக கொண்டு வரபபட்டனஎன்பதை முக்கியமாக கவனிக்க வேண்டும். கொள்முதலையும் குறைந்த பட்ச ஆதரவு விலையையும் நிறுத்தினால் என்ன ஆகும்?

அரசு கொள்முதல் செய்வது என்பதும் குறைந்த பட்ச ஆதரவு விலையும் ஏதோ ஆட்சியாளர்களின் தயாள் குணத்தினால் வந்தததல்ல. மிகப்பெரிய உழவர் கிளர்ச்சிகளால் வேறு வழியின்றி நிர்பந்திக்கப்பட்டு அரசு உருவாக்கியதாகும். 1970களில் முற்பகுதியில் சிரிகாகுளம் மேற்கு வங்கத்தில் நடந்த நக்சல்பாரிஉழவர் எழுச்சி போராட்டங்கள் பழங்குடியினரின் போராட்டங்கள் ஆகியவற்றின் விளைவாகவே அன்றைய காங்கிரஸ் அரசை வேளாண் விளைபொருள் ஆணையத்தையும் அதனைத்தொடர்ந்து விவசாய கொள்முதலை ஊக்குவிக்கும் வகையில் இந்திய உணவுக் கழகமும் உருவாக்கப்பட்டது.

இதன் மூலம் விவசாயிகளின் விளைபொருட்கள் தேவைக்கும் மேல் அதிகமான விளைந்தாலோ யாரும் வாங்க ஆளில்லை என்றாலோ அரசு கொள்முதல் செய்து கொண்டதால் விவசாயிகள் ஒரளவு வருமானத்துடன் நொடித்து போகாமல் காப்பாற்றப்பட்டனர்.

Food Corporation of India to sell rice for production of ethanol

அதிகமாக கொள்முதல் செய்வதை அரசு சேமிப்பு கிடங்கில் வைத்துக்கொண்டது. இப்படியாக இந்திய உணவுக் கழகத்தில் இருந்த உணவு தானிய சேமிப்புகள்தான் கடுமையான பஞ்சங்கள் இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டபோதும் மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு அவர்கள் பட்டினிச்சாவுகள் தடுக்கப்பட்டன. தற்போதைய கொரனா பொது முடக்கத்தில் மக்களுக்கு அரிசியும் கோதுமையும் வழங்கப்பட்டது இவ்வாறே. இந்த அடிப்படையான விசயம்கூட தெரியாமல் அதை எப்படி கலைக்க முடிவெடுத்தது இந்த அரசு. அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பதன் நோக்கமே அந்தவிலைக்கு கீழே வேளாண் விளை பொருட்களை தனியார் கொள்முதல் செய்யக் கூடாது என்பதற்காகத்தான்.

சட்டத்தில் இல்லை

தற்போதைய சட்டத்தில் அரசு கொள்முதல் செய்வதும் குறைந்த பட்ச ஆதரவு விலையும் இடம் பெறவில்லை. ஆனால் மோடி இவை இரண்டும் தொடர்ந்து நீடிக்கும் என்று பேசியுள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக விவசாயிகளுக்க அளித்த வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்றவில்லை அது மட்டுமின்றி டெல்லியில் அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியபோது மோடி அவர்களை சந்திக்கவே மறுத்துவிட்டார். இதனால் விவசாயிகள் மோடி அரசு சொல்வது எதையும் நம்ப மறுக்கின்றனர்.

English Summary

The Forgotten Unprecedented Struggle of Farmers - Part - 3

Latest Articles

KOLNews