KOLNews

மறக்கடிக்கப்பட்ட விவசாயிகளின் வரலாறு காணாத போராட்டம் - பாகம் - 2

மெய். சேதுராமலிங்கம்

-------------------------------------

3 சட்டங்கள்

தற்போது மோடி அரசு கொண்டு வநதுள்ள விவசாய சட்டங்களால் இந்த வரலாறு திரும்ப உள்ளது. இதற்கு சற்றும் குறையாத நிலையை ஏற்படுத்தவிருக்கும் 3 விவசாய சட்டங்கள் குறித்து விரிவாக காண்போம்.

முடக்க நிலையை பயன்படுத்திக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே 3 சட்ட மசோதாக்களை கொண்டுவர திட்டமிட்டிருந்தது. அந்த மசோதாக்களாவன வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் விவசாயிகளுக்கான அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) சட்டம் விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம மற்றும் வேளாண்மை சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசர சட்டம் அல்லது சுருக்கமாக கூறினால் ஒப்பந்த விவசாய சட்டம்

PM Modi reviews vaccination drive expresses satisfaction stresses on NGOs  help for better outreach | India News – India TVவெளிப்படையான நோக்கமும் உள்நோக்கமும்

முதலில்அரசு இந்த சட்டங்கள் கொண்டுவருவதற்கான நோக்கங்கள் என்று அறிவித்திருப்பதையும் உள்ளே மறைந்திருக்கும் உண்மையான நோக்கங்களையும் காண்போம். இந்த சட்டம் விவசாயிகளை இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விடுதலை செய்வதாகவும் அவர்கள் தங்களது விருப்பம்போல எந்த மாநிலத்திற்கும் சென்று தங்களது உற்பத்தி பொருட்களை விற்கலாம். அதாவது வடநாட்டில் அழைக்கப்படும் மண்டிகள் அல்லது தமிழ்நாட்டில் உள்ளஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் வேளாண் உற்பத்தி பொருள் கொள்முதல் நிலையங்களைத் தாண்டி எங்கும் விற்கலாம். அவர்களுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது. இதனையே பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

உண்மையான நோக்கங்கள்

ஆனால் இந்த மூன்று விவாய சட்டங்களையும் ஒரு சேர படித்தால் அதில் உள்ள நோக்கம் பட்டவர்ததனமாக தெரிய வரும். உணவு பொருட்கள் உற்பத்தி ,அப்பொருட்களுக்கான விலை நிர்ணயம் கொள்முதல் மற்றும் சேமிப்பு ஆகியவற்றை தீர்மானிப்பதிலிருந்து அரசு படிப்படியாக விலகிக்கொண்டு அந்த பொறுப்பை கார்ப்பரேட் உணவுக் கம்பெனிகள் மற்றும் தனியார் ஏற்றுமதியாளர்களிடம் முழுமையாக ஒப்படைப்பது சந்தை சக்திகளிடம் விவசாயிகளை நிராதரவாக விட்டு விடுவது சந்தையே விவசாயத்தை தீர்மானிப்பதாக மாற்றுவது அரசு கொள்முதலை நிறுத்துவது குறைந்த பட்ச ஆதரவு விலையை மறுப்பது இவை இரண்டும் சட்டத்தில் இல்லை என்பதால் தானாகவே இரண்டும் நிறுத்தப்பட்டு அதன் தொடர்ச்சியாக இந்திய உணவுக்கழகம் கலைக்கப்படும்,

Farmer Protests In India: Why Are They Angry? : Goats and Soda : NPRஇதன் இறுதியான இலக்காக பொதுவிநியோகமும் அதன் ஒரு பகுதியான ரேசன் கடைகளும் படிப்படியாக மூடப்படும். ஒப்பந்த விவசாயம் மூலம் உணவு உற்பத்தி அதாவது விவசாய உற்பத்தியை முழுமையாக கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைப்பது அதன் மூலமாக விவசாயிகளை முதலில் கார்ப்பரேட்டுகளின் அடிமைகளாக மாற்றுவது பின்னர் அவர்கள் தாங்களாகவே விவசாயத்தை விட்டு வெளியேறும் சூழ்நிலையை ஏற்படுத்துவது இறுதியில் உணவு பாதுகாப்பு விலைக்கட்டுபாடு ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவது

இந்த சட்டங்களினால் விவசாயமும் விளை பொருட்கள் வர்த்தகமும் மாநிலப்பட்டியலில் இருந்தன தற்போது அவை கமுக்கமான முறையில் மத்திய அரசின் கட்டுபாட்டிற்கு சென்று விட்டன. கல்வி . மீன்வளத்துறையை தொடர்ந்து தற்போது விவசாயத்திலும் மாநில உரிமை பறிப்பதும் நடந்துள்ளது.

இவை மேலேபாட்டமாக பார்க்கும் போது தெரியாது ஆனால் மிக ஆழமாக பரிசீலிக்கும்போது மேற்படிவிளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை எனத்தெரியவரும்.

English Summary

The Forgotten Unprecedented Struggle of Farmers - Part - 2

Latest Articles

KOLNews