KOLNews

ஓயாத அலைகளான நெகிழியின் அச்சறுத்தல்கள்..! - பாகம் - 2

கடந்த 2018ல் உலக சுகாதாரத் தினத்தன்று பிரதமர் மோடி ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிகளை ஒழிக்கப் போவதாக சூளுரை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து 2019ல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது தீங்கு விளைவிக்கின்றதும் மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் இடம் விட்டு அகற்றுதல்) விதிகளை திருத்தியது. ஏற்கனவே சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த அலகுகள் ஆகியவற்றில் நெகிழி உதிரிகள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது. அவை தடை செய்யப்பட்டன அந்த தடையானது பெரிய அளவில் கடைப்பிடிக்கப்படவில்லை.

India Announces Plans to Ban Scrap Plastic Imports | Waste3602019 மார்ச்சில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மத்திய மாசு கட்டுபாட்டு வாரியம் ஒரு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை.மாநிலங்கள் நெகிழி கழிவுகள் மேலாண்மை குறித்து எந்த தகவலையும் அளிப்பதில்லை. நெகிழி உற்பத்தியை தடுப்பதற்கோ ஒழுங்குபடுத்துவதற்கோ எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை. ஒரு சில நெகிழிப்பைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் அது கடைப்பிடிக்கப்படவில்லை. மேலும் நெகிழிகள் எரிக்கப்படுவது தொடர்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தது. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016ஆனது நெகிழி மேலாண்மை குறித்து மாநிலங்கள் முறையாக அறிக்கைகள் அளிக்க வேண்டும் விதிகளை கடைப்பிடிக்க தவறுபவர்கள் மீது வரிகள் விதிக்க வேண்டும் என்று கூறுகிறது.

தற்போது ஆந்திரா சத்தீஸ்கர்,குஐராத்,இமாச்சல பிரதேசம்,கர்நாடகம்,மத்தியபிரதேசம்,மேகாலயா, ஒடிசா, ராஐஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய10 மாநிலங்களிலிருந்து சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு(டால்மியா சிமெண்ட், தமிழ்நாடு சிமெண்ட் கழகம் லிமிடெட் ஆந்திரா சிமெண்ட்ஸ் போன்ற 15ற்கு மேற்பட்டதொழிற்சாலைகளுக்கு) நெகிழிகள் சுழற்சி செய்யப்பட்டு சிமெண்ட் உற்பத்தி மேற்கொள்வதற்காக அனுப்பபடுகின்றன.

Britain's plastic shame: UK sends tonnes of household waste overseas to be  sorted by kids paid £3.60 for 12 hours work - World News - Mirror Online

இன்னொருபக்கம் 20 விழுக்காடு நெகிழி குப்பைகள் தெருவில் அதை பொறுக்கி எடுபவர்களால் எடுக்கப்பட்டு அவை பிரிக்கப்படுகின்றன. இதில் சுமார் 80000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இருப்பினும் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு எறியப்படும் நெகிழிகளை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016 ஆனது முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். மக்கும் நெகிழிகள் மக்காத நெகிழிகள் பிரித்தெடுக்கப்படவும் மக்காத நெகிழிகளும் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிகளும் முற்றிலுமாக அழிக்கப்படுவதற்கும் அவை சுற்றுச்சூழலில் கலக்கவிடாமல் செய்வதற்கும் புதிய கட்டமைப்புகளும் எந்திரங்களும் உருவாக்கப்பட வேண்டும். இவ்லாவிட்டால் மனித குலம் அனைத்து உயிரினங்களும் பெரிய விலையை கொடுக்க நேரிடும்.

கடலும் நெகிழியும் - 

சாதராணமாக கடற்கரைகளுக்கு செல்லும் யாரும் காணும் காட்சி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நெகிழிக் குப்பைகளைத்தான். அவை நெகிழி பைகளாக, காலி தண்ணீர் பாட்டில்கள். காலியான தண்ணீர் பைகள் ஆகியவற்றை அனைத்து இடங்களிலும் காண நேரிடும். கடற்கரைகளே இப்படி என்றால் கடலுக்குள்ளும் சமுத்திரங்களிலும் மிகப்பெரிய அளவில் ஆங்காங்கே மிதக்கின்றன. இவற்றை உண்ணும் மீன்களும் கடற்பறவைகளும் குறிப்பாக திமிங்கலங்களும் டால்பின்களும் வயிறு வீங்கி மரணமடைகின்றன.

Beat plastic pollution of the sea Archives | Taras Oceanographic Foundation

பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஒரு முறை பயன்படுத்தி விட்டு எறிந்துவிடும் நெகிழிப் பெரருட்களே கடல் கடற்கரை மற்றும் தடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்குகின்றன. சுற்றுலா பயணிகளின் ஒரு நாள் பொழுது போக்கும் கூத்தும் பல உயிர்களை பலி வாங்குகின்றன.

உலகின் நிலங்களிலிருந்தும் சமவெளிகளிலிருந்தும் 80 விழுக்காடு உரக்கழிவகள்,நீரோடைகள்,கழிவு நீர் மற்றும் குப்பைகள் கடலில் கலக்கின்றன. நதிகள் சிறறோடைகள் மற்றும் நீர் வழித்தடங்களின் மூலமாக 5லிருந்து 13 மில்லியன் டன்கள் நெகிழிப் பெரருட்கள் கடலில் கலக்கின்றன. இவை இரண்டு வகைப்படும். முதல் வகை நெகிழியை மேலாண்மை செய்வதற்கு முறையான கட்டுமான வசதி இல்லாமல் கடலிலும் கடற்கரையிலும் கொட்டப்படுபவை இரண்டாவது வகையானது மனிதர் குலம் விலங்குகள் மற்றும் உயிரினங்களுக்கும் ஒட்டு மொத்த சுற்றுச்சூழல் அமைப்புக்கும் நெகிழி ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து மக்களின் அலட்சிய மனோபாவம்.

இதை தடுத்து நிறுத்த நெகிழி உற்பத்தி தொடங்கும் இடத்திலேயே தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்கு அரசின் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நெகிழி உற்பத்தி தடுத்து நிறுத்தி அதற்கு மாற்றானவற்றை உற்பத்தி செய்ய அரசு ஊக்குவிக்க வேண்டும். சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் நெகிழி உற்பத்தியானது அதுவும் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியின் உற்பத்தியானது முழுமையாக நிறுத்தப்பட வேண்டும். அதில் அரசு எந்தவித சமரசமும் காட்டக்கூடாது.

English Summary

Threats of incessant waves of plastic ..! - Part - 2

Latest Articles

KOLNews