KOLNews

ஓயாத அலைகளான நெகிழியின் அச்சறுத்தல்கள்..! - பாகம் -1

இன்றைய உலகின் ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கும் மனித குலத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் என்றழைக்கப்படும் நெகிழி உருவெடுத்துள்ளது  சாலைகளில் தெருக்களில் நீர் நிலைகளில்குப்பைக்கூளங்களில் சுற்றுலாத்தளங்களில் கல்விக்கூடங்களில் கடற்கரைகளில் என காணும் இடமெல்லாம் நீங்காமல் இடம்பெற்றிருப்பது நெகிழிகளே. அவை கேரி பேக்குகளாக,எந்தப் பொருளை பேக்கேஐ செய்வுதற்கும் பயன்படுத்தப்படும் பொருளாகவும் நெகிழிகளே. நமது வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் அனைத்து சுக துக்க நிகழ்வுகளிலும் நெகிழி இல்லாத நிலை என்ற நிலை ஏற்பட்டு விட்டது எனலாம்.நாம் பயன்படுத்தும் பெரும்பாலான நெகிழிகள் ஒரு சிலவற்றை தவிர்த்து மக்காதவையே. தகவல் தொடர்பு இல்லாத கிராமங்களில் நகரங்களின் அனைத்து பகுதிகளிலும் நெகிழியின் வகை குறித்து ஒரளவுக்கு விழிப்புணர்வு வந்திருந்தாலும் பெரும்பாலான மக்களை அதுவும் படித்தவர்களைக் கூட ஆட்கொள்வது நெகிழியின் கடுமையான பாதிப்பு குறித்து அலட்சிய உணர்வே.

90% of plastic polluting our oceans comes from just 10 rivers | World  Economic Forumநெகிழியை உண்ணும் ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பறவைகள் மீன்கள் திமிங்கலங்கள் ஆகியவற்றின் இரைப்பை கல்லீரல் குடல் பகுதி ஆகியவை கடுமையாக பாதிக்கப்படுகின்றன. இவ்வுறுப்புகளில் சென்றடையும் நெகிழி அப்படியே செரிக்கப்படாமல் கிடக்கின்றன. இதனால் வயிறு வீங்கிவிடுவதோடு படிப்படியாக கல்லீரல் பழுதடைந்து அவை மரணமடைந்து விடுகின்றன. இந்த வகையில் நாள்தோறும் பல விலங்குகள் மரணமடைகின்றன. இவை விலங்குகளை மட்டுமின்றி மனிதர்களையும் பாதிக்கின்றன. திரைச்சீலைகள் மேநை விரிப்புகள் ஆகியவற்றிலிருந்து பறந்து காற்றில் மிதக்கும் நெகிழித்துகள்கள் மனிதர்கள் உண்ணும் உணவிலும் கலந்து விடுகின்றன. சுவாசக்குழாய்களின் மூலம் சென்று நுரையீரல்களையும் பாதிக்கின்றன. இந்த விபரீதங்கள் அறியாமலேயே அலட்சியமாக நெகிழிப் பைகளை எறிந்து விட்டு செல்கின்றனர். தற்போது நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

Giant 'Dead Whale' Is Haunting Reminder of Massive Plastic Pollution  Problem - EcoWatchஇந்தியாவைப் பொருத்தவரை நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு11 கிலோ நெகிழியானதுபயன்படுத்தப்படுகின்றார். அமெரிக்காவை ஒப்பிடும்போது 10ல் 1 மடங்கும் சீனத்தைப் பொருத்தவரை 3ல் 1 மடங்கும் இந்தியாவில் நெகிழியின் பயன்பாடு உள்ளது. இருப்பினும் உலகளவில் இந்தியாவானது நெகிழியால் மாசுபடும் நாடுகளில் 12வது இடத்தில் உள்ளது. இது தொடர்பாக மத்திய மாசு கட்டுபாடு வாரியம்2015ல் மதிப்பீடு ஒன்றை வெளியிட்டது. அந்த மதிப்பீட்டு அறிக்கையில் நாளொன்றுக்கு 26,000 டன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் 15,600 டன்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன.மீதியுள்ள 10400 டன்கள் நாள்தோறும் அப்படியே கழிவாக கொட்டப்படுகின்றன. இவை சாக்கடைகளிலும் நதிகளிலும் ஆறுகளிலும் கடல்களிலும் கொட்டப்படுகின்றன. இவ்வாறு கழிவுகளை உற்பத்தி செய்யும் பெரு நகரங்களாக டெல்லி,சென்னை,கொல்கத்தா, மும்பை,பெங்களுரூ, அகமதாபாத் ஹைதராபாத் ஆகியன உள்ளன. இவற்றில் PET.LIPE,HDPE,.PVC PP poly ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன இவற்றில் PET HDPE PVC ஆகியன மறுசுழற்சி செய்யக்கூடியவை. 70விழுக்காடு நெகிழியின் கழிவுகள் பேக்கேஐ செய்வதற்கான பொருட்களிலிருந்தே வருகின்றன.

Plastic packaging ban 'could harm environment' - BBC News

எங்கிருந்து அதிகமான கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சாதாரணமாக பொதுச்சிந்தனையில் உள்ளது போன்று வீடுகளில் (60விழுக்காடு) ஓட்டல்களிலோ அல்ல. இவர்கள் நுகர்பவர்களாகவே உள்ளனர் இவற்றில் ஒரு முறை பயன்படுத்தி விட்டு எறிந்து விடும் நெகிழிகளே அதிகம்.

2015ல் பிளாஸ்ட்டிக் இந்தியா பவுன்டேசன் என்ற நெகிழி பொருட்கள் தயாரிக்கும் உற்பத்தியாளர்களின் அமைப்பு மற்ற வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் நெகிழி நுகர்வானது அதிகமாக உள்ளது.

அதாவது இங்கிலாந்தில் 2.5விழுக்காடு, சீனத்தில் 10விழுக்காடும்தான் நுகரப்படுகின்றது. ஆனால் இந்தியாவில் 16 விழுக்காடு பயன்பாடு உள்ளது என்கிறது. எனவே உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கடந்த 2014ல் 311 மில்லியன் இருந்த்த தற்போது கிட்டத்தட்ட 1000 டன்களாக உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே அமைப்பு 70 விழுக்காடு பேக்கேஐ பொருட்களிலிருந்து வருவதாகவும் அவை ஒரு முறை பயன்படுத்தக்கூடியவையாகவும் மக்காதவை என்றும் கூறியுள்ளது. 

English Summary

Threats of incessant waves of plastic ..! - Part-1

Latest Articles

KOLNews