KOLNews

வாழையை வாழ விடுவார்களா?

மெய்.சேது ராமலிங்கம்

--------------------------------------

வாழைக்கு வரலாற்றிலும் பண்பாட்டிலும் நமது அன்றாட வாழ்க்கையிலும் தனிச்சிறப்பான இடம் உண்டு. தமிழகத்தில் எந்த மங்களகரமான நிகழ்வுகள் அது திருமணமானாலும் கோயில் திருவிழாவானாலும் பூப்பெய்தும் விழாவானாலும் சரி எல்லாவற்றிலும் வாழை இடம் பெறும். ஏனெனில் வாழையின் ஒவ்வொறும் தனிச்சிறப்பு வாய்ந்தவை அவை மிகவும் பயனுள்ளவை. அதனால் வாழ்த்தும் போதே வாழையடி வாழையாக என வாழ்த்துவார்கள்.

Banana fingers | Miha Pavlin | Flickrஎந்த விருந்திலும் வாழைப்பழம் இல்லாமல் இருக்காது ஆப்பிள் பலா மாம்பழம் ஆரஞ்சு என எத்தனை பழங்கள் இருந்தாலும் அதில் வாழைப்பழத்திற்கே முதலிடம், கடவுளுக்கு அர்ச்சனை செய்தாலும் அதில் வாழை இடம் பெறாமல் இருக்காது. வாழ்வில் ஒன்றி போன வாழை அனைத்து மங்கள நிகழ்ச்சிகளிலும் தவறாது இடம பெறும் வாழைக்கு விரைவில் ஈமச்சடங்கு நடக்கப்போவதாக தாவரவியல் மற்றும் உயிரியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் சில பத்தாண்டுகளில் வாழை அழிவதற்கான வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர். அனைவரையும் அச்சமுற வைக்கும் இந்த எச்சரிக்கையின் பின்னணியை அறிய வாழையின் சிறப்பு இயல்புகளை அதன் தொன்மையிலிருந்தே அறிவோம்

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழம்

மிகப்பழமையான பழங்களில் ஒன்றாக கருதப்படும் வாழை ஏறத்தாழ 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக தென் கிழக்கு ஆசியாவில் உணவாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக வரலாற்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

வாழை மரத்தில் ( உண்மையில் அது பிரம்மாண்டமான செடி என்றும் தாவரவியல் மொழியில் மியூசா(musa paradisiacal) என்றழைக்கப்படும்

அந்த மரத்தில் பச்சை வாழை, செவ்வாழை, கதலி.பூவன், நாட்டு வாழை,ரஸ்தாலி ,மலைப்பழம் என உள்ளுர் சந்தைக்கு வரும் பழங்களுடன் சமீபத்தில் உலகச் சந்தையை ஆக்ரமித்திருக்கும் கவென்டிஷ் என்ற வகை வாழைப்பழம் வரை ஏறத்தாழ 500 ரகங்கள் அறியப்பட்டுள்ளன. இலங்கையில் மட்டுமே 28 ரகங்கள் பயிராகின்றன.

பெரும்பாலான அறிவியலாளர்கள் வாழையின் ரகங்களின் விளைச்சல் அதிகமான அளவில் மலேசியாவில் தொடங்கிய காரணத்தினால் அந்நாட்டையே வாழையின் தாயகமாக ஏற்கின்றனர். அங்கிருந்து மடாஸ்கருக்கு கடலோடிக.ளுக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் வெப்ப மண்டல நாடுகளில் பரவி அவற்றை தமது வாழ்விடமாக மாற்றிக் கொண்டு விட்டன.

ஒரு குலையிலேயே 200 பழங்கள்

Banana Farming - KisanBuggyவாழை ஒரு குழையிலேயே 100ற்கும் மேற்பட்ட பழங்களை பரிமாறி விடுகிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் பிரபலமான பூவன் வாழை மரத்தில் ஒரே நேரத்தில் 250ற்கும் மேற்பட்ட பழங்களை சுமக்க முடியாமல் சுமந்து கொண்டிருப்பதை சாதாரணமாக காண முடியும். தாய் வாழை இறந்து விட்டாலும் வாழையடி வாழையாக அது ஈன்றெடுத்த மகவுகள் அடுத்தடுத்து பூப்படைந்து குலைகளை தரத் தயாராக இருக்கும்.

சத்துகள் அதிகமாக இருக்கும் ஏழைகளின் பழம்

எந்த காலத்திலும் எவ்வளவும் கிடைக்கும் என்பதால் அவை மலிவாகவே கிடைக்கும். ஏழை எளிய மக்கள் வாங்க்கூடிய அளவில் மலிவான விலையில் கிடைக்கின்றன. இதனால் சாதி மதம் வர்க்கம் ஆகியவற்றை கடந்து அனைத்து தரப்பு மக்களும் தங்களது விழாக்களிலும் விருந்திலும் வாழை பழத்தை வைப்பதற்று தவறுவதில்லை.

வாழைப்பழம் தன்னுடைய எடையில் முக்கால் பங்கு தண்ணீரையே கொண்டுள்ளது. ஆனால் பழத்தில் கார்போ ஹைட்ரேட், மக்னீசியம்.பொட்டாசியம்,பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் என பல வகை சத்துக்களை கொண்டுள்ளது. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இது எல்லா வகையிலும் மலச்சிக்கலை நீக்கி விடுகிறது. இதய நோய்களை உருவாக்கும் கெட்ட கொழுப்புகளை உருவாக்கும் கொலஸ்டிராலோ சோடியமோ கிடையாது என்பதால் இது அனைத்து தரப்பு மக்களால் பெரிதும் விரும்ப்டும் பழமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உகாண்டாவில் முதன்மை உணவாக

அமெரிக்கர் ஒருவர் ஆண்டுக்கு தோராயமாக உண்ணும் ஆப்பிளின் எடை சராசரியாக 16,7 பவுண்டுகள்( 1பவுண்டு 454 கிலோ) ஆனால் வாழைப்பழத்தின் அளவு 26,2 பவுண்டுகள், பிரிட்டிஷார் ஆண்டுதோறும்

7 பில்லியன் வாழைப்பழங்களை உண்கிறார்கள். இதில் உகாண்டா ,கென்யா தான்சானியா, ருவாண்டா போன்ற ஏழை ஆப்பிரிக்க வாழைதான் முதன்மை உணவாக அந்த நாடுகளின் மக்களின் வயிற்றை நிரப்புகிறது.

Uganda Banana Chips Industry, Banana Production in Ugandaசிறுநீரகத்தில் தோன்றும் கற்களை கரைக்க்கூடிய வாழைத்தண்டு சாறு உள்ளிட்டு வாழையின் அனைத்து பாகங்களுமே ஏதோ வகையில மருத்துவ குணங்களுடன் பண்பாட்டுடன் இணைந்துள்ளன. இவ்வளவு அரிய பொக்கிஷமான வாழைக்கு ஏன் அழிவு நேரிடப்போகிறது அதை புரிந்து கொள்ள வாழைகளின் மரபு குறித்து சுருக்கமான முறையிலாவது தெரிந்து கொள்வோம்.

வாழைகளின் மரபு

வாழை உணவு தட்டுக்கு வருவதற்கு முன்பாக அது தனது சந்த்தியை பெருக்கிக் கொள்வதற்கு அதனிடம் விதைகள் இருந்தன. விதைகள் வாயில் ருசிப்பதற்கு நெருடலாக இருந்தன. இதனைத்தொடர்ந்து வாழை இனங்களில் விதைகள் இல்லாத பழங்களையும் அதிசயமாக உருவாக்கின.

Seeded Bananas Information and Facts

இரண்டு வாழை இனங்களின் கலப்பில் முளை கொண்ட மகள் வாழையில் தாயிடமிருந்து ஒன்றும் தந்தையிடமிருந்து ஒன்று என இரண்டாக இருக்க வேண்டிய குரோமோசம்கள் சில சமயங்களில் விபத்தாக மூன்றாக அமைந்தன. பிறப்புரிமைக்குளறுபடிகளால் பெற்றோரிடமிருந்து கொஞ்சம் மாறுபட்டு புதிய இனமாக உருவெடுத்த மகள் வாழையினால் கலவி செய்ய இயலாமல் போனது. ஆண் கருவின் சேர்க்கை இல்லாமலேயே பெண் பூ பழங்களை கனித்த்து. இதனைத் அறிவியல் தமிழில் மிகவும் பொருத்தமாக கன்னிக்கனியம் .(parthenocarpy)என்பர்.

விதைகள் இல்லாத அதிசயமாக

Do bananas have seeds? - Quora

ஆண் கலப்பு இல்லாத்தால் விதைகள் இல்லாமல் உருவான பழங்கள் உண்பதற்கு வசதியாக இருந்த்தால் பழங்குடியினர் அதை பிடித்துக்கொண்டனர். அன்றைய கற்காலத்தில் வாழ்ந்த விவசாய பெருங்குடி மக்கள் வாழைத்தண்டுகளை வெட்டி பதியம் பதியம் போட்டு தொடர்ந்ததன் விளைவாகவே இன்று உலகம் முழுவதும் விதைகளைத் தொலைத்த வாழைகள் உருவாகி உள்ளன.

வாழைகளின் பலவீனம்

இனக்கலப்பு செய்ய இயலாத வகையில் பதியம் போட்டு பெருகிய இவ்வாழைகள் மரபணு வகையில் ஒரே மாதிரி ,இருக்கின்றன.அவை ஆதித்தாயாக இருந்த வாழைப்பழத்தின் வடிவ அமைப்பையும் ஒத்து காணப்படுகின்றன. பிரச்சினை இங்குதான் ஆரம்பமாகிறது.

What Our Favorite Foods Looked Like Before Humans Started to Cultivate Themபொதுவாக அனைத்து பயிர்களின் சந்ததிகள் தங்களது மரபணுக்கள் காலத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்கின்றன. இப்படி பன்முகத்தன்மையுடன் மரபணுக்கள் இருப்பதால் ஒவ்வொரு காலமும் வரும் நோய்களுக்கு எதிர் கொள்ள தங்களை தயார் படுத்திக்கொள்கின்றன. ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக ஒரே மரபணு அமைப்பினைக் கொண்டுள்ள வாழையினங்கள் புதிது புதிதாக வரும் நோய்களை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.இன்று எல்லாப் பயிர்களையும் விட கிருமிகளின் தாக்குதலுக்கு அதிகமாக உள்ளாவது வாழைகள்தான். எல்லா வாழைகளும் அச்சடித்த மாதிரி ஒரே மாதிரி உள்ளதால் ஒன்றில் தொற்றுகின்ற நோய் முழுவாழைத்தோப்பையும் பற்றி விடுகிறது. இதனால் வாழைச்சருகில் பற்றிய தீப்பொறி போல அனைத்து வாழைகளுமே அழிந்து போக நேரிடும் என்று அறிவியலாளர்கள் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.

தொடங்கி விட்ட அழிவு

ஏற்கனவே இதற்கான் அறிகுறிகள் தென்படத் தொடங்கி விட்டன. ஒரு புதிய வகை பங்கஸ் நோய் வாழையை இலையில் ஆரம்பித்து முழு மரத்தையும் சாய்த்து வருகிறது. 1963லேயே தொடங்கிய இந்த நிகழ்வை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் தற்போது இதை உணரத் தொடங்கி உள்ளனர். எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்று உலகின் வாழை தோப்புகளிலும் வயல்களிலும் முன்னேறி வருகிறது.

ஏற்கனவே உகாண்டாவில் 40 விழுக்காடு வாழை வயல்கள் அழிந்து விட்டன. உலகின் வாழை உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் 90களின் பிற்பகுதியில் ஆரம்பித்த நோய் 70 விழுக்காடு வயல்களை காவு வாங்கி விட்டது. ஹோண்டுராசில் ஆண்டுதோறும் 30 லட்சம் வாழை பழங்கள் அளவுக்கு பங்கஸ் சாப்பிட்டு வருகிறது. விரைவில் அனைத்து நாடுகளில் இது தொடர் நிகழ்வாக பெருந்தொற்று போன்று அமையும் என எச்சரித்துள்ளனர் அறிவியலாளர்கள்.

மிகவும் சத்துள்ள எளிய மக்களுக்கு கிடைக்கும் வாழை வாழ விடப்படுமா என்பதே நமக்கு முன் உள்ள கேள்வி.

English Summary

Will the banana let to survive?

Latest Articles

KOLNews