KOLNews

25 வருஷமா அப்படிதான் சொல்றாங்க..ஆனா அவர் அப்படி இல்ல..! - ரஜினி குறித்து போஸ் வெங்கட்

சன் டிவியில் ஒளிபரப்பான 'மெட்டிஒலி' நெடுந்தொடர்மூலம் பிரபலமானவர்  நடிகர் போஸ் வெங்கட். பின்  தமிழ் சினிமாவில் சிறு வேடங்களிலில் ஆரம்பித்து வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து பேசப்பட்டவர், 

இந்நிலையில் முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ள அவர், புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான இப்படம் மக்களிடையே குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது. 

இதற்கிடையே, தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்றார் போஸ் வெங்கட். ரஜிகாந்த்துடன் 'சிவாஜி'  படத்தில் நடித்த அனுபிவைத்தை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், நானும் ரஜினி சாரும் நிறைய அரசியலை பற்றி பேசிருக்கோம் என்றார். அத்துடன், மற்றவர்களை விட அரசியல்ல எனக்கு ரஜினி சார் பத்தி கொஞ்சம் அதிகமாவே தெரியும் என்றார். 

நடப்பு அரசியல் குறித்து அவர் உங்களுடன் பேசியது உண்டா என்ற கேட்டபோது. "இல்லை, அவர் பேசிய அரசியலே வேற, ராமராவ் எப்படி அரசியல் ஆரமிச்சாங்க, அய்யா எம்.ஜி.ஆர் எப்படி ஆரமிச்சாங்கன்னு நிறைய பேசுவாரு.. என்று கூறினார்  அத்துடன், அந்த மனுஷன கடந்த 25 வருஷமா இவர் காலி காலினு சொல்றாங்க.. ஆனா அவர் அப்படி காலியாகுற ஆள் கிடையாது என்று உறுதியுடன் தெரிவித்தார்.

 

English Summary

25 years is like that. But he is not! - Bose Venkat on Rajini

Latest Articles

KOLNews