KOLNews

அஜித் நடித்த காதல் காவியத்தின் 25ஆம் ஆண்டு..! - கொண்டாடும் முன் இதையும் யோசியுங்கள்..!

நடிகர் அஜித் குமாரின் திரை வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்திய 'காதல் கோட்டை ' திரைப்படம் 1996 ஜூலை 12 ஆம் தேதியில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அதே போல அதே தினத்தில் வெளியான நடிகர் லிவிங்ஸ்டன் நடித்த 'சுந்தர புருஷன்' என்கிற திரை படமும் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இரண்டு படங்களும் ஆண்டாண்டு காலமாக தமிழ்திரையில் வரும் காதல் கதைகளை கொண்டவை தான் என்றாலும், சொல்லப்பட்ட விதத்தில் இரண்டு படங்களும் வெளிப்படுத்திய வித்தியாசம் தான் வெற்றியை கொடுத்தது. 

இரண்டு பட கதாநாயகர்களான அஜித்தும், லிவிங்ஸ்டனும் தங்களது நடிப்பிற்காக பேசப்பட்டார்கள். 

காதல் கோட்டையில், தங்கர் பச்சானின் ஒளிப்பதிவும் பேசப்பட்டது. இயக்குனர் அகத்தியனுக்கு பேசப்பட்டார். அதே போல சுந்தர புருஷன் இயக்குனர் சபாபதியும் பேசப்பட்டார். சிறபியின் இசையில் பாடல்களும் பேசப்பட்டன.  25 வருடங்கள் கழித்தும் ரசிகர்களின் நினைவில் நீங்கா இடம் பெற்றுள்ள இப்படங்கள் இரண்டுக்குமே அவற்றின் திரைக்கதைகள்  பெரும் துணையாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

இதில் கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் , இதில் இரண்டுமே காதல் படம் என்றாலும், ஒரு படத்தின் வெற்றி மற்றொன்றின் வெற்றியை பாதிக்கவில்லை என்பது தான்.

ஜூலை 12இல் 'காதல் கோட்டை' திரைப்படத்தின் 25வது ஆண்டை கொண்டாடும் அஜித் ரசிகர்கள், உடன் வெற்றி பெற்ற 'சுந்தர புருஷன்' திரை படத்தையும் சேர்த்து கவுரவப்படுத்தினால், அது பெருந்தன்மை குணம் கொண்ட அஜித்திற்கும் புகழ் சேர்க்கும். 

English Summary

25th year of love epic starring Ajith ..! - Think about this before celebrating ..!

Latest Articles

KOLNews