KOLNews

எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் நாவலைத் தழுவி ஒரு படம்..! - பக்க பலம் இளையராஜா

நாவல்களை திரைப்படமாக்கும் விஷயம் தமிழ் திரைக்கு புதிதல்ல.. இருந்துலாம், இது எப்போதாவது நடக்கும் விஷயம் தான். அப்படி உருவானவற்றில் 'தில்லானா மோகனாம்பாள்', முள்ளும் மலரும், சமீப காலங்களில் வந்த அசுரன் போன்ற படங்களை குறிப்பிடலாம். 

நாவல்கள் திரைக்கதை  வடிவத்தை பெரும் போது அது சராசரி சினிமா ரசிகனை கவரும் வகையில் இருக்கவேண்டும். அப்படி நாவல்கள் அனைத்தும் அமையாது. சினிமாவுக்கு ஏற்றவாறு நாவல்களை காட்சிப்படுத்தும் பக்குவமும் இயக்குனர் இருந்தால் ஒழிய இதனை சாதிக்க முடியாது. 

அந்த திறன் உள்ள இயக்குனர்களும் இருக்கின்றார்கள். அந்த வகையில் தற்போது , பிரபல நவீன இலக்கிய எழுத்தாளர்  சு . சமுத்திரம் எழுதிய ஒரு கோட்டுக்கு வெளியே என்கிற நாவலைத் தழுவி 'உலகம்மை; என்கிற படத்தை உருவாக்குகின்றனர். 

Stream Kan Malargalin Alaipithal by mprsakthi | Listen online for free on  SoundCloud

96 , மாஸ்டர் , கர்ணன் படங்களில் நடித்த கௌரி கிஷன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு பெரும் பலமாக இசைஞானி இளையராஜாவின் இசை இருக்க போகிறது. 1970 களின் சாதியப் பிரச்னையை களமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த உலகம்மை படத்தை விஜய் பிரகாஷ் இயக்குகிறார் . இதில், ஜிஎம் சுந்தர் , மாரிமுத்து , அருள் மணி மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

English Summary

A Film based on Writer Su.Samuthiram's novel ..! - supporting Strength Ilayaraja

Latest Articles

KOLNews