பாராதிராஜா - இளையராஜா கூட்டணி என்றாலே அந்த படத்தில் உள்ள பாட்டுகள் காலம் கடந்து நிற்கும் பாடல்களாக அமையும் என்பதால், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் கூட்டணியாக இருந்து வந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக கடைசியாக 28 ஆண்டுகளுக்கு முன் வெளியான ‘நாடோடி தென்றல்’ படத்திற்கு பின் அவர்கள் இணைந்து பணியாற்றவில்லை.
இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், அண்மையில் .‘ஆத்தா’ எனும் படம் மூலம் மீண்டும் இணைவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக படத்தின் தயாரிப்பு வேலைகள் தடைபட்டிருந்த நிலையில், தற்போது இப்படம் கைவிடப்பட்டுள்ளதாக இயக்குனர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் இனிய தமிழ் மக்களே, 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட வேண்டிய கதை ஆத்தா. முன்பே இந்த கதையை படமாக்கி இருந்தால், உங்கள் பாரதிராஜாவை கண்டிருக்கலாம். காலசூழ்நிலை ஒன்று உள்ளது. நடைமுறை நவீன முற்போக்கான இந்த கால கட்டத்தில் வந்த பல சினிமாக்களின் கருவை நாடியுள்ளது ஆத்தா. இதை மீண்டும் கையில் எடுத்தால் பொருள் ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பெரும் நட்டம் ஏற்படும் என்ற காரணத்தினால், ஆத்தா கைவிடப்படுகின்றன. புதிய அறிவிப்பு, புதிய தலைப்புடனும் புதிய தொழில்நுட்ப கூட்டணியுடன், மிக விரைவில் அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
English Summary
'Aatha' movie dropped ..! - Confirmed Bharathiraja