KOLNews

நடிகர் திலிப் குமார் தேறிவருகிறார்..! - மனைவி சாய்ரா பானு தகவல்.

60 வருடங்களாக ஹிந்தி திரை ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட கதாநாயகன் திலிப் குமார். இவர் நடித்த முஹல்-இ- ஆசம், தேவதாஸ், மதுமதி, ராம் அவுர் ஷ்யாம், கங்கை ஜமுனா போன்ற படங்கள் வசூலை வாரி குவித்ததுடன், காலம் கடந்து பேசும் படங்களாக இருந்து வருகிறது. 

ஹிந்தியில், தர்மேந்திரா, அமிதாப்பச்சன் காலங்களுக்கு முந்தைய தலைமுறை நடிகரான திலீப்குமாருக்கு தற்போதைய வயது 98. கடந்த சில நாட்களுக்கு முன் மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். வரின் உடல்நிலை குறித்த தகவல்களை அவ்வப்போது உடன் இருந்து கவனித்து வரும் அவரது மனைவியும் நடிகையுமான சாய்ரா பானு தெரிவித்து வருகிறார், 

அந்த வகையில் நேற்று, திலீப்குமார் தேறி வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் சிகிச்சை முடித்து வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ள சாய்ரா பானு, அவர் நலம் பெற வேண்டி பிராத்தித்த ரசிகர்களுக்கு நன்றி செலுத்துவதாகவும், திலிப் குமாரின் உடல் நிலை குறித்து உலவும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

English Summary

Actor Dilip Kumar is getting well ..! - Information from wife Saira Banu.

Latest Articles

KOLNews