KOLNews

'பாஸ் என்ற பாஸ்கரன்' புகழ் நடிகர் மாறன் கொரோனாவால் மரணம்..!

குருவி, கில்லி  பாஸ் என்ற பாஸ்கரன்,  உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.

நடிகர் மாறன், விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களான குருவி, கில்லி உள்ளிட்டவைகளில் அவருக்கு நண்பராக சிறு வேடங்களில் நடித்தவர். திரைப்படங்களில் சிறிய வேடங்களில் தோன்றினாலும், அவர் முகம் மக்களிடம் நன்றாக அறியப்பட்ட ஒன்று.  அவர் இவை தவிர  சில தமிழ் படங்களிலும்  நடித்துள்ளார். 

செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்து வந்த நடிகர் மாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த 2 நாட்களுக்கு முன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். 

நேற்று, நெல்லை மாவட்ட வட்டார தமிழில் பேசி மக்களின் மனதை கவர்ந்த நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா  மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தற்போது  கொரோனா தொற்றால் நடிகர் மாறன் உயிரிழந்தது  கோலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

English Summary

Actor Maran dies in Corona ..!

Latest Articles

KOLNews