KOLNews

நடிகர் பார்த்திபன் ‘ நடிகை லட்சுமி ராமகிருஷ்ணா படங்களுக்கு தேசிய விருது..!

கதைசொல்லும் பாணியில் வித்தியாசத்தை மட்டுமே முயலும் இயக்குநரும் நடிகருமான பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு மத்திய அரசின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல்  லட்சுமி ராமகிருஷ்ணா இயக்கிய ‘ஹவுஸ் ஓனர்’ படத்துக்கும் மத்திய அரசு விருது கிடைத்துள்ளது.

வருடந்தோறும் மத்திய அரசு இந்திய மொழி சார்ந்த சிறந்த படங்களுக்கு விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுகளான விருது பட்டியலில் தமிழ் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு பார்த்திபனின் படைப்பான  'ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7' . ஒரே ஒரு கதாபாத்திரத்தை கொண்டு எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. வித்தியாசமான வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு ஒட்டுமொத்த இந்திய திரை ஜாம்பவான்களை திரும்பி பார்கவைத்துளார் பார்த்திபன்.. இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத பெரும் முயற்சி இது என்று பலரும் பாராட்ட்டும் நிலையில்,  செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, உலகப்பட விழாவில் விருது பெறும் படம் என்று முன்னரே பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

House Owner Movie Gallery - House Owner Movie Stills 06

அதே போல,  சென்னையின் மழை நாட்களை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி வயதான தம்பதியினிடையே இருக்கும் அளப்பரிய அன்பை  ‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் மூலம் வெளிச்சம்போட்டு காட்டியுள்ளார்  லட்சுமி ராமகிருஷ்ணன்.

இவைதவிர, இந்தி, மலையாளம், பெங்காலி, மராத்தி போன்ற பிற இந்திய மொழி படங்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தி திரையுலகிற்கு 4 படங்கள் வெவ்வேறு பிரிவுகளில் தேர்வாகியுள்ளது.

English Summary

Actor Parthiban ‘Actress Lakshmi Ramakrishna’ Films bags National Award .!

Latest Articles

KOLNews