KOLNews

"இதுதான்டா போலீஸ்" புகழ் நடிகர் ராஜசேகர் கார் விபத்தில் சிக்கினார்..!

பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர் கார் விபத்தில் காயங்களுடன் உயிர் தப்பினார். இதுதான்டா போலீஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்கள் மூலம் முன்னணி நடிகராக உள்ளவர் ராஜசேகர் 57 . இவர் தமிழில் பாரதிராஜா இயக்கிய புதுமைப்பெண் திரைப்படத்தில் அறிமுகமாகி, பின் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயாகனாக உருவெடுத்தார்.

முன்னதாக நேற்று காலை படப்பிடிப்பிற்காக விஜயவாடாவிலிருந்து ஐதராபாத்துக்கு காரில் கிளம்பினார். அதி காலை 2 மணியளவில் பெத்த கோல்கொண்டா பகுதிக்கு அருகே சுற்றுச்சாலையில் வந்த போது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் ராஜசேகருக்கு சேலசான காயம் ஏற்பட்டது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ,காரில் ஏர் பேக்குகள் இருந்ததால் ராஜசேகர் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர்தப்பியதாக வும்,காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்ததாகவும் தெரிவித்தனர்.

English Summary

Actor Rajasekhar gets into a car accident

Latest Articles

KOLNews