KOLNews

நடிகர் வி . காளிதாஸ் காலமானார்..! - வடிவேலுவுடன் நடித்த பின்னணி குரல் கலைஞர்

பின்னணிக் குரல் கலைஞரும், நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் நகைச்சுவை காட்சிகளை நடித்து மக்களால் நன்கு அறியப்பட்டவருமான நடிகர்  வி . காளிதாஸ் காலமானார்.

பல்வேறு திரைப்படங்களிலும் , தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துப் புகழ் பெற்ற வி . காளிதாஸ் , குணச்சித்திர, மற்றும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு  பின்னணிக் குரல் கொடுத்து புகழ்பெற்றவர்.  

கணீர் குரலுக்கு சொந்தக்காரரான வி , காளிதாஸ் இன்று காலமானார் . இதனை நடிகர் சங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ளது . இனிமேல் இக்குரலைக் கேட்க முடியாது . தனது குரலால் வில்லன் கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டியவர் காலமானார் என்று நடிகர் மோகன் ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

English Summary

Actor V. Kalidas passes away ..! - Dubbing artist who played with Vadivelu

Latest Articles

KOLNews