KOLNews

வாயை கொடுத்து..வசை வாங்கிய நடிகை சார்மி..!

அண்மையில் சீனாவிலிருந்து பரவிய கரோனா வைரஸ் குறித்து உலகமே அச்சத்தில் உள்ள சூழ்நிலையில், நடிகை சார்மி அது குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு சிக்கலில் மாட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை தனது அபரிதமான கவர்ச்சியால் தெலுங்கு சினிமாவை கலங்கடித்தவர் நடிகை சார்மி. அவர் தமிழ் மற்றும் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

Image result for telugu actress sharmi hot

இந்நிலையில் சமீபத்தில் தனது சமூகவலைத்தள பக்கத்தில் டிக்டாக்வீடியோ ஒன்றை வெளியிட்டார் , 

 அதில்,  'ஆல் தி பெஸ்ட்' நண்பர்களே..!  ஏன் தெரியுமா..?  ஏனென்றால்,  கரோனா வைரஸ் டில்லிக்கும் தெலுங்கானாவுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. இப்போதுதான் இந்த செய்தி எனக்கு தெரியவந்தது..!  அந்த பயங்கரமான வைரஸ் இங்கும் வந்துவிட்டது',  என்று கூறி கெக்கே பேக்கே என சிரித்துளார் சார்மி. 

இது சமூகவலைத்தள வாசிகளிடம் கோபத்தை ஏற்படுத்த, அவர்கள் சார்மியை கடுமையான வார்த்தைகளால் வசை பாட ஆரம்பித்துவிட்டனர். இதனால் கலங்கி போன சார்மி உடனடியாக இந்த வீடியோவை அழித்து விட்டு தனது பக்குவமற்ற செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

English Summary

Actress Sharmie ..- Get scold with her loose talk

Latest Articles

KOLNews