KOLNews

நடிகை தமன்னா ஆஸ்பத்திரியில் அனுமதி..!

நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றால் சில நடிகர்கள், நடிகைகள் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக  கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்நிலையில், தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி உள்ளாகியிருப்பதுடன் , அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் தங்கள் அன்பை வெளிப்படுத்திவருகிறார்கள்.

English Summary

Actress Tamanna admitted to hospital

Latest Articles

KOLNews