KOLNews

ஆகா..மீண்டும் அமலா..! - 28 வருடத்திற்கு பின்..

'கைதி' திரைப்படத்தின் வெற்றிக்கு பின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ஒரு படத்தை உருவாகி வருகிறது. இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமலா அக்கினேனி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

80களின் இறுதியில் தமிழ் திரையுலகை கலக்கிய அமலா, 1991-ல் பாசில் இயக்கத்தில் வெளியான கற்பூரமுல்லை படத்துடன் தமிழில் தன் நடிப்பை நிறுத்திவிட்டார். தற்போது  கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு இப்போது அவர் தமிழில் ரீஎன்ட்ரியாகிறார். ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்கிறார், சுஜித் சாரங்  ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

கவர்ச்சி, மற்றும் குடும்பப்பாங்கான படத்திலும் தன் திறமையை வெளிப்படுத்தியவர் அமலா.

டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட  அவர் , ரஜினி, கமல் , சத்யராஜ், பிரபு, போன்ற நட்சத்திர கலைஞர்களுடன் நடித்தவர்.

மேலும், பாரதிராஜா, பாசில், மணிரத்னம் போன்ற ஜாம்பவான் இயக்குனர்களின் படத்தில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Again Amala ..! - After 28 years

Latest Articles

KOLNews