KOLNews

மறுபடியும் விஜய்- கார்த்தி..! - வெற்றிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் கோலிவுட்..!

கடந்த தீபாவளி பண்டிகையின்போது நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படத்திற்கு பெரிய போட்டி போடும் வகையில் அதிக படங்கள் வெளியாகவில்லை. நடிகர் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் மட்டுமே சொல்லிக்கொள்ளும் அளவில் வெளியானது. 

இவற்றில், விஜய்யின் 'பிகில்' வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்னசன ரீதியாக 'கைதி' தான் அதிகம் பேசப்பட்டு வெற்றியடைந்தது.

இந்நிலையில், அடுத்து வரும்  விஜய்யின் 'மாஸ்டர்' படமும் கார்த்தியின் 'சுல்தான்' படமும் ஒன்றாக வெளிவரவுள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆகவே சென்றமுறை  போலில்லாமல் , இந்த முறை யார் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக வெற்றி பெற போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் நடிகர் கார்த்தியின் படம் கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்கிற மக்களின் எண்ணஓட்டம், அவரின் நட்சத்திர அந்தஸ்தை உயர்த்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் பிகிலுடன் சேர்ந்து வெளியாகாமல் இருந்தால், கைதி திரைப்படம் விமர்சனம் அளவில் வெற்றி பெற்றிருக்கும் ,ஆனால் இவ்வளவு வணிக ரீதியான சாதனையை புரிந்திருக்குமா என்பது கேள்விக்குறியே என சினிமா வணிக நோக்கர்கள் கருதுகிறார்கள்.

எப்படியோ 'பிகில்' திரைப்படம் தானும் வெற்றிபெற்று, உடன் வந்த 'கைதி' திரைப்படத்தின் வெற்றிக்கும் ஒருவகையில் துணை புரிந்திருப்பது ஆரோக்கியமான விஷயமாக தமிழ் திரைத்துறையில் பேசப்படுகிறது.

English Summary

Again Vijay- Karthi ..! - Kollywood looking forward to success ..!

Latest Articles

KOLNews