KOLNews

படப்பிடிப்பில்..100 பேருக்கு அனுமதி கொடுங்கள்..! - முதல்வரிடம் திரை துறையினர் கோரிக்கை..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முடங்கியிருந்த சினிமா, மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள், அரசு அறிவித்த தளர்வுகளுக்கு பின் குறைந்த அளவிலான பணியாளர்களை பயன்படுத்தி நடந்து வருகின்றன. இருப்பினும் அதில் சிரமம் இருப்பதால் ,இது தொடர்பாக தமிழக முதல்வர் சந்திக்க திரைத்துறையினர் முடிவெடுத்தனர்.

அதையடுத்து , படப்பிடிப்பிற்கு 100 பேர்களை  அனுமதிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம், 'பெப்சி' அமைப்பின் நிர்வாகி  ஆர்கே செல்வமணி பிற நிர்வாகிகளுடன் நேரில் சென்று வலியுறுத்தினார் 

அப்போது படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவித்த அவர்கள், தற்போது படப்பிடிப்பிற்கு 75 பேரை மட்டுமே அனுமதிப்பதில் சிரமம் இருப்பதாக முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே. செல்வமணி, படப்பிடிப்பின் போது 100 பேர்களை அனுமதிக்கும் பட்சத்தில் உடனடியாக 30 திரைப்படங்களின் படப்பிடிப்பை துவக்க முடியும். என தெரிவித்தார். 

English Summary

Allow 100 people to shoot ..! - Cinema industry request to the Chief Minister ..!

Latest Articles

KOLNews