KOLNews

கோட்செவின் நியாப்படுத்தல்களை அனுமதிப்பதா..? - காந்தியை நான் ஏன் கொன்றேன் ? படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு ..

மஹாத்மா காந்தியின் நினைவுநாளையொட்டி ஜனவரி 30 - ஆம் தேதி காந்தியை நான் ஏன் கொன்றேன் ? என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது . 

இந்நிலையில், தேசத்தந்தையை கொன்றவர் தரப்பில் சொல்லப்படும் வாதங்களை கொண்டு ஒரு படத்தை வெளியிடுவதா ? என்கிற வகையில் சர்ச்சை எழும்பியுள்ளது.அத்துடன், இந்த திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளது . 

அத்துடன், சில அரசியல் தலைவர்களும், குறிப்பாக  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கும் இத்  திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரியுள்ளது .

காந்தியைக் சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவின் தரப்பில் உள்ள நியாயத்தை விவரிக்கும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில்,  இந்த படத்திற்கு பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வலுத்துவருகின்றன . கொலை குற்றவாளி கோட்சேவின் நியப்படுத்தல்கள் நாட்டு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதுடன் , பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும் . இதனால் இந்த திரைப்படம் வெளியாவதை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க துவங்கியுள்ளது.

English Summary

Allowing Godse's justifications? - Why did I kill Gandhi? Strengthening opposition to the film ..

Latest Articles

KOLNews