KOLNews

அமிதாப்பச்சனும் கிளம்பிட்டாரா..? - திசை மாறும் திரைத்துறை..!

கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால்,மற்ற தொழில்துறைகளைப் போலவே இந்திய திரைப்பட பட உலகமும் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் சினிமாவின் எதிர்காலம் சிதைந்து போகாது, அது வேறொரு பரிணாமத்தில், வேறொரு தளத்தில் பரிமளிக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு, அதனை செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

Actress Jyothika Ponmagal Vanthal Movie First Look Poster HD | New ...

தமிழில் நடிகை ஜோதிகா நடித்திருக்கும் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பான ‘பொன் மகள் வந்தாள்’ படத்தை, இதேபோல ஒரு இணைய தளம் இருமடங்கு விலை கொடுத்து வாங்கியிருக்கிறது. இந்த செய்தி வெளியானதும், இதற்கு ஆதரவாகவும், எதிராகவும்  திரையுலகித்தனர் முட்டி கொள்ளும் அளவிற்கு சர்ச்சை ஆனது.

இந்நிலையில், இந்தி பட உலகிலும் படங்களை  தியேட்டர்களில் திரையிடப்படாமல், நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்ப ஆயத்தமாகிவிட்டனர். 

அந்த வகையில் தற்போது அமிதாப்பச்சனின் ‘குலாபோ சிதாபோ’ இந்திப் படமும். இதே போல ஷகுந்தலா தேவி என்னும் படமும், ஆனந்த் பண்டிட்டின் ‘செஹ்ரே’ என்னும் படமும் தியேட்டர்களில் ரிலீஸ் இல்லாமல் நேரடியாக இணையதளத்தில் ஒளிபரப்பாகிறது.

ஒரு பக்கம் வட்டியை சுமக்க முடியாத தயாரிப்பாளர்களுக்கு இணைய தள ஒளிபரப்பு ஒரு வரப்பிரசாதமாக மைகிறது என்பது தான் யதார்த்த உண்மை என சொல்லப்படுகிறது.

ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப்படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என நம்புவதாலும், சினிமா தயாரிப்பாளர்களின் கவனம் வேறு பக்கம் திரும்புவது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

English Summary

Amitabh bachan too ..? - Directional Changing Cinema industry..!

Latest Articles

KOLNews