KOLNews

மிஷ்கினின் ‘அஞ்சாதே 2’ வில் அருண் விஜய்..?

இயக்குனர் மிஷ்கின்.. இவர் 2006ல் 'சித்திரம் பேசுதடி' மூலம் இயக்குனர் ஆனார். ஆனால்  2008-ம் ஆண்டு இவரின் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'அஞ்சாதே' மூலமே வெகுஜனம் மத்தியில் அதிகம் பேசப்படும் இயக்குனர் ஆனார். பிரசன்னா, அஜ்மல், நரேன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்த அப்படத்தின் திரைக்கதை அமைப்பும், விறுவிறுப்பான காட்சிகளும் இன்னும் மிஷ்கினுக்கு பாராட்டுதல்களை பெற்று தருகின்றன.

12 Years Of Anjathe: Why Mysskin's Film Created A Ripple On Screen

இந்நிலையில், தற்போது அருண் விஜய்யை நாயகனாக வைத்து ‘அஞ்சாதே 2’ திரைப்படத்தை இயக்க மிஷ்கின் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெற்றி அடைந்த சைக்கோ படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்தார் மிஷ்கின். அதில் விஷாலுடன் ஏற்பட்ட  கருத்து வேறுபாட்டால் அந்தப் படத்திலிருந்து விலகி விட்டார். ஆகவே, துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்குவதாக விஷால் அறிவித்தார்.

இதனிடையே, அஞ்சாதே 2 படத்தை இயக்க மிஷ்கின் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்ததாகவும் . ஆனால் அவர் தன் கைவசம் உள்ள படங்களை நடித்து முடிக்க வேண்டிய நிலைமையில் இருப்பதால் அஞ்சாதே 2 கதையில் அருண் விஜய் ஹீரோவாக தேர்வாகியுள்ளதாகவும்  கூறப்படுகிறது.

ஊரடங்கு முடிந்தவுடன், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary

Arun Vijay on Mysskin's Anjade 2 ?

Latest Articles

KOLNews