KOLNews

அருண் விஜய் நடிக்கும் 'மாஃபியா' ...ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் அருண்விஜய்யின் திரை வாழ்க்கையில் வெற்றி கொஞ்சம் காலதாமதமாக வந்தாலும், தற்போது அதை நிரந்தரமாகும் விதத்தில் கதைகளை தேர்ந்தெடுத்து அவர் நடித்து வருவதால், அவர் படங்கள் தற்போது  கூடுதல் கவனம் பெறுகிறது. 

அந்த வகையில், அருண் விஜய் நடித்துள்ள மாஃபியா திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for Arun Vijay starrer 'Mafia' ... Release Date Announced!

துருவங்கள் பதினாறு படத்தை இருக்கையின் நுண்ணியிலிருந்து பார்க்க வைத்த இயக்குநர் கார்த்திக் நரேன். தான் இந்த  மாஃபியா படத்தை இயக்கியுள்ளார்  என்பது எதிர்பார்ப்புக்கான கூடுதல் காரணம்.

கார்த்திக் நரேன். த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பிப்ரவரி 21-ம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று படத்தின் இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த படம், நடிகர் அருண்விஜய்க்கு பெயர் சொல்லும் படமாக அமையும் என கோலிவுட்டில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

English Summary

Arun Vijay starrer 'Mafia' ... Release Date Announced!

Latest Articles

KOLNews