KOLNews

பா.ரஞ்சித்துடன் கைகோர்க்கும் ஆர்யா ..! - விரைவில் வெளியாகிறது 'சார்பட்டா பரம்பரை'

சமூக கண்ணோட்டதுடன் திரைப்படம் எடுக்கும் இந்த தலைமுறை இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பா. ரஞ்சித்.  அட்டகத்தி , மெட்ராஸ் , படங்களை தொடர்ந்து உச்ச நட்சத்திரமான ரஜினியை வைத்து கபாலி , காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. ரஞ்சித்.

அதன் பின்,  பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைக்குண்டு ஆகிய படங்களைத் தயாரித்த இவர்,  நடிகர் ஆர்யா கதையின் நாயகனாக நடிக்கும் 'சார்பட்டா பரம்பரை' எனும் படத்தைத் தற்போது இயக்கியுள்ளார்.

இதில்,  குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு இசை - சந்தோஷ் நாராயணன் , ஒளிப்பதிவு - முரளி . சார்பட்டா பரம்பரை படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது . ஜூலை 22 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் சார்பட்டா பரம்பரை படம் வெளியாகிறது . இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது .

இப்படம், நடிகர் ஆர்யாவிற்கு பேர் சொல்லும் ஒரு படமாக அமையும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

English Summary

Arya to join hands with Pa. Ranjith ..! - Coming Soon 'Saarpatta Paramparai'

Latest Articles

KOLNews