KOLNews

அமெரிக்காவில் 'அசுரன்'க்கு கிடைத்த அங்கீகாரம்..! - பெருமை சேர்த்த வெற்றிமாறன்

நடிகர் தனுஷ் கதை கேட்காமல் ஒரு படத்தை ஒப்புக்கொள்கிறார் என்றால், அது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படமாக தான் இருக்கும். அந்த அளவிற்கு இருவருக்குமான புரிதல் உள்ளது . மேலும்  அவ்வளவு உணர்பூர்வமாக படத்தை வெற்றிமாறன் இயக்குவார்.

33 வயதிலேயே ஆடுகளம் படத்திற்காக ஆறுதேசிய விருதுகள் வென்ற வெற்றிமாறன், தான் தயாரித்த விசாரணை படத்தையும் தேசியவிருதுக்கு தகுதியானதாய் தயாரித்தார். 'விசாரணை', இந்தியாவிலிருந்து ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for vetrimaran

ஐநாவில் நடந்த மனித உரிமைகள் கூட்டத்தொடரில் பல வருடங்களுக்கு பிறகு இந்தியாவிலிருந்து விசாரணை திரைப்படம் மனித உரிமை சார்ந்து திரையிடப்பட்டு , சரியாக ஒரு மணிநேரத்திற்கு மேல்

விசாரணை படம் சார்ந்தும் மற்றும் மனித உரிமைகள் சார்ந்தும் ஐநா மனித உரிமைகள் மன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டது.