KOLNews

தியேட்டர்களில் அதிகாலை காட்சிகள் ரத்தா ..? - அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில்  திரைப்படம், தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பாகவே வெளியாகவுள்ளது . 

இந்நிலையில் அதன் அதிகாலை காட்சிகளை பார்க்கும் வாய்ப்பு இந்த முறை அவர் ரசிகர்களுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தற்போது அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்க அரசு பரிசீலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

ஏற்கனவே பிகில் படத்தின் கதை தன்னுடையது என ஒரு குறும்பட இயக்குனர் உரிமை கொண்டாடி அது தற்போது வழக்கில் உள்ளது.இந்நிலையில் தற்போது 'பிகில்' வெளியாக உள்ள நிலையில் அதிகாலை காட்சி தடை என்பது மற்றொரு சிக்கலாக உருவெடுத்துள்ளது.

Image result for bigil audio launch vijay speech

முன்னதாக பிகில் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டிக்கதை, ஆளுபவர்களை கோபடுத்தியதன் பின்னணியில் இந்த பிரச்சனையை  சிலர் யோசிக்கிறார்கள். 

மேலும், பண்டிகை நாள் என்பது விடுமுறை நாள் என்பதும் , அப்படிப்பட்ட நாளில் பண்டிகை நாளின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தான் இதை பார்க்கப்படவேண்டும் என கூறுகிறார்கள். அதைவிடுத்து இதில் அரசியல் செய்கிறார்கள். குறிப்பாக விஜய் படம் வெளியாகும் நிலையில் தான் இந்த யோசனை வரவேண்டுமா..? என கேள்வி எழுப்பப்படுகிறது.

மற்றொரு புறம் இந்த அதிகாலைக்காட்சிகளுக்கு அதிகளவில் டிக்கெட் விலை இருப்பதும், இந்த அளவு உயர்ந்த கட்டணத்தையும் பொருட்படுத்தாது தன் படத்தை வந்து பார்க்க ரசிகர்கள் இருப்பதை வைத்து நடிகர்கள் தங்கள் சம்பளத்தை மேலும் மேலும் கூடி கொண்டே போகிறார்கள். இது நாளடைவில் திரைத்துறையின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகாலை காட்சிகள் ரத்தானால் , வசூல் பாதிக்காடும் சூழல் உருவாகும் என விநியோகிஸ்தர்கள் கலக்கம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.

English Summary

Ban on Morning shows..? - Vijay fans in shock

Latest Articles

KOLNews