KOLNews

இனிய தமிழ் மக்களுக்கு “மீண்டும் ஒரு மரியாதை” செய்ய வரும் பாரதி ராஜா..!

பாரதிராஜாவின் முத்திரை பதித்த படங்களில் முக்கியமானது ‘முதல் மரியாதை’ திரைபடம்.

நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பில் வெள்ளிவிழா கொண்டாடிய அந்த திரைப்படம் அக்காலத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. 

இந்நிலையில் தற்போது மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் புதிய படம் தான் ‘மீண்டும் ஒரு மரியாதை’.

Image result for meendum oru mariyathai

வாழிவில் வரும் சோதனைகள் , இடர்பாடுகளைளை நேர்மறையான எண்ணத்தோடு போராடி,வெற்றிபெறுவம் உத்வேகத்தை தரும் திரைப்படமாக தற்போது உருவாகியுள்ளது இப்படம் .

முதல்மரியாதையில், ஓடம் செலுத்தும் ராதாவிற்கும் , நடுத்தரவயதை ஒட்டிய சிவாஜிக்கும் இடையே உருவாகும் மெல்லிய அன்பை போல,இந்த படத்திலும், வெளிநாட்டில் ஒரு வயதான ஆணுக்கும் , ஒரு இளம் பெண்ணுக்கும், இடையேயான உறவுவும், அதில் உருவாகும்  சிக்கல்கள்  குறித்தும், அதனை அவர்கள் எதிர்கொண்டு, போராடி, வெற்றிக் கொள்வதையும் பாரதிராஜா தனக்கே உரிய பாணியில் தர உள்ள படமாக 'மீண்டும் ஒரு மரியாதை' படம் இருக்கும் என தெரிகிறது.

English Summary

Bharathi Raja to come back to the Tamil people

Latest Articles

KOLNews