KOLNews

வலைத்தொடரில் கால்பதிக்கும் பாரதிராஜா..!

இவரின் வரவுக்கு பின் தான், பெரும்பாலும் ஸ்டுடியோவுக்குள் மட்டும் இருந்த தமிழ் சினிமா, வெளிப்புற படப்பிடிப்புக்கு வந்தது என்று சொல்லுவார்கள். அவர் இயக்குனர் பாரதிராஜா.

கிராமப்புறங்களை கதை களமாக்கி மண்வாசனையோடு கதை சொன்னவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. கருத்தம்மா திரைபடத்துக்கு பின் பெரிய 'ஹிட்' கொடுக்காத பாரதிராஜா, தொலைக்காட்சி தொடர் ஒன்றை இயக்கி வந்தார். அதன் பின், தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் 'குற்றப்பரம்பரை' என்ற கதையை படமாக எடுப்பது குறித்து, இவருக்கும் இயக்குனர் பாலாவுக்கும் இடையே  போட்டி நிகழ்ந்து. இருவரும் மேடைகள் வழியே ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து கொண்டனர். ஒருவழியாக அந்த படத்தை பாரதிராஜா எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் அதை வலைத்தொடராக கொண்டு வர உள்ளார் பாரதிராஜா.அத்துடன்,  அதை அவரே இயக்கி நடிக்கிறார்.

இதன் மூலம் பாரதிராஜா, தனது  நீண்ட கால ஆசைக்கு வடிவம் கொடுக்கவுள்ளார். பிரமாண்ட தொடராக குற்றப்பரம்பரை வெளிவரவுள்ளது. படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

ஆக, வலையுக ரசிகர்களின்  மனதை தொட்டு பார்க்க, மண்வாசனையுடன் கூடிய பாரதிராஜாவின் அடுத்த படைப்பு தயாராகிறது.  

English Summary

Bharathiraja in the web series ..

Latest Articles

KOLNews