KOLNews

குணச்சித்திர நடிகர் ப்ளோரன்ட் பெரேரா காலமானார்..!

'புதிய கீதை, கயல், என்கிட்டே மோதாதே, தொடரி, வேலையில்லா பட்டதாரி போன்ற தமிழ் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருந்த நடிகர் ப்ளோரன்ட் பெரேரா கொரானா (67) பாதிப்பால் காலமானார்.

இவர்,.எம்.ஏ., ஆங்கிலம் இலக்கியம் படித்த, மூத்த ஊடகவியலாளரும் கூட, என்பது குறிப்பிடத்தக்கது. விருதுநகர் மாவட்டம், சாத்துரைச் சேர்ந்தஇவர், கலைஞர், 'டிவி'யில், முன்னாள் பொது மேலாளராகவும், சில தனியார் தொலைக்காட்சி ஊடகங்களில், முக்கிய நிர்வாகியாகவும் பணியாற்றியவர்.

அத்துடன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க காப்பாளராகவும் இருந்துள்ள ப்ளோரன்ட் பெரேரா அண்மையில்  தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

சமீபத்தில் , ப்ளோரன்ட் பெரேராவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவர், சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். .இவருக்கு, ராஜேஸ்வரி என்ற மனைவியும், யோகேஸ்வரன் என்ற மகனும், நிவேதிதா என்ற மகளும் உள்ளனர்.

English Summary

Character actor Florent Ferera has passed away ..!

Latest Articles

KOLNews