KOLNews

'சைரா' பட வெற்றியில் சிரஞ்சீவி குடும்பம் கொண்டாட்டம் ! - வசூல் மழையாம்..

தமிழக சினிமாவில் ரஜினியின்  சண்டை காட்சிகளுக்கும், கமலின்  நடனத்துக்கும் ரசிகர்கள் கிறங்கி கிடந்த காலத்தில் ஆந்திராவில் சீரஞ்சீவி இவை இரண்டிலும் கலக்கி கொண்டிருந்தார்.

அரசியல் கைகொடுக்காத நிலையிலும் சினிமா தொடர்ந்து சீரஞ்சீவி வசமாகவே தான் இருந்து வருகிறது. அதற்கு உதாரணம் தற்போது வெளியாகி கலக்கி கொண்டிருக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி' திரைப்படம்.

அக்டோபர் 2 ஆம் தேதி ,  சிரஞ்சீவி நடிப்பில் வெளியான இப்படம், வெளியான 2 நாட்களில் உலக அளவில் சுமார் 100 கோடி ரூபாய் வசூல் சாதனையைப் படைத்துள்ளது ‘

இதனை  கொண்டாடும் வகையில் சிரஞ்சீவியின் உறவினர்களான அல்லு அரவிந்த் மற்றும் நடிகர் அல்லு அர்ஜுன் ஆகியோர், சக்ஸஸ் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிரஞ்சீவி, படத்தின் தயாரிப்பாளரும் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண், நடிகர்களான அகில் அகினேனி, வருண் தேஜ் போன்றோரும் கலந்து கொண்டனர். 

மேலும், இந்த பார்ட்டியில் படக்குழுவினரும் கலந்து கொண்டு, செய்தியாளர்கள் மத்தியில் ‘சக்ஸஸ் மீட்'-யும் நடத்தி முடித்துள்ளனர். 

Image result for syra narasimha reddy review

சைரா திரைப்படம், முதல் சுதந்திரப் போர் என்று சொல்லப்படும் சிப்பாய் கலகத்துக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடியஉய்யல்வாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையை மையப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

சைரா படத்தில் சிரஞ்சீவியைத் தவிர நம்ம ஊர் விஜய் சேதுபதி, தமன்னா, அனுஷ்கா, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சுதீப், ஜகபதி பாபு,  நயன்தாரா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

English Summary

Chiranjeevi family celebrates success of 'Saira' - Collection rainfall ..

Latest Articles

KOLNews