KOLNews

குறைந்த வயதில் மரணித்த காமெடியன்கள்..! - தமிழ் திரையின் சாபக்கேடா..?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த  ‘அது இது எது’, ‘கலக்கப் போவது யாரு’, ‘கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்’ உள்ளிட்ட பல நிகழ்ச்சியில் பங்கெடுத்த வடிவேல் பாலாஜி  மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார்.

சின்னத்திரையை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையையும் சேர்த்து சோகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த சம்பவம். தமிழ் திரையின் வரலாற்றை புரட்டி பார்த்தல், இது போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து திறமையாளர்களை அது இழந்து வந்திருப்பது தெரியும். 

நடிகர் விஜயுடன்  'துள்ளாத மனமும் துள்ளும் படத்தில்  'டிரௌசர் பாண்டி கதாபாத்திரத்தின் மூலம் அதிகம் பேசப்பட்டவர் 'பாரி வெங்கட்'.  தனித்துவமான உடல் மொழி, வசன உச்சரிப்பு என திரையுலகத்தினரை சட்டெனெ திரும்பி பார்க்க வைத்தவர்,. புகழின் வெளிச்சத்தை முழுமையாக அனுபவிக்காத நிலையில் மரணமடைந்தார். பிற் காலத்தில் நடிகர் விஜய் அவரின் குடும்பத்திற்கு உதவி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட அவரின் மறைவும் ஒரு இழப்பு தான்.

Surulirajan Hashtag on Twitter | Veethi

அதே போல், நடிகர் சுருளிராஜன்,  வடிவேல்பாலாஜி மரணித்த அதே 42 வயதில் மரணத்தை தழுவினார். ஆனால் அவர் புகழின் உச்சத்தை பார்த்து விட்டிருந்தார். திரையில் தோன்றியதுமே ரசிகர்களை சிரிக்க வைக்கும் முகம் கொண்டவர். அவரது இழப்பும் அந்த காலகட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மக்களின் சோகங்களை மறக்க வைக்கும் இந்த கலைஞர்களின் மரணம், மக்களையும் சோகத்தில் ஆழ்த்துவது இயல்பு தானே..! சிரிக்கவைத்தவர்களுக்காக கொஞ்சம் கண்ணீரை சிந்துவதே கூட ஒரு நியாமான அஞ்சலி தான்.

 

 

English Summary

Comedians who died at a young age ..! - The curse of the Tamil screen ..?

Latest Articles

KOLNews