KOLNews

ஆண்ட்ரியாவுக்கு கொரோனா..!

பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழில், ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம்,தரமணி, வடசென்னை போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. பல திரைப் பாடல்களையும் பாடியுள்ள இவர், மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை  தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.  அந்த பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது  - ’கடந்த வாரம் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையறிந்து என்னை கவனித்துக் கொண்ட நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி. இப்போதும் வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு இருக்கிறேன். ஆனால், குணமடைந்து வருகிறேன்’என்று தெரிவித்துள்ளார்.

English Summary

Corona to Andrea ..!

Latest Articles

KOLNews