KOLNews

பிரபல இயக்குநர் ராஜசேகர் காலமானார்...! - சோகத்தில் தமிழ் திரையுலகம்..!

பிரபல இயக்குநரும்  சின்ன திரை நடிகருமான ராஜசேகர் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்

தமிழில் 'பாலைவனச்சோலை' உள்ளிட்ட படங்களை இரட்டை இயக்குநர்கள் ராபர்ட் - ராஜசேகர் இயக்கியுள்ளனர். அவர்களில் ராஜசேகர் முக்கியமானவர்.

அதன் பின் ராஜசேகர் தனித்து சின்னப்பூவே மெல்லப்பேசு, மனசுக்குள் மத்தாப்பு மற்றும் பறவைகள் பலவிதம் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.      

நடிகராக அவர் பாரதிராஜா இயக்கிய 'நிழல்கள்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடலில் இவர் நடித்திருந்தார்.

அண்மை காலமாக தொலைக்காட்சி நெடுந்தொடர்களில்  நடித்து வந்தார். 

இந்நிலையில், உடல்நலக்குறைவால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலமானார். 

English Summary

Famous Director Rajasekhar passed away

Latest Articles

KOLNews