KOLNews

மேகமாய் வந்து போகிறேன்..! - பிரபல பாடலாசிரியர் முத்து விஜயன் காலமானார்

சென்னையில் பிரபல திரைப்பட பாடலாசிரியர் முத்து விஜயன் வயது 48,  உடல்நலக் குறைவால் காலமானார். இது திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக  முத்து விஜயன் மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். பாடலாசிரியர் சங்கம் மூலம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி முத்து விஜயன் நேற்று மாலை உயிரிழந்தார். 

அவரின் மறைவுக்கு திரையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

நடிகர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் "மேகமாய் வந்து போகிறேன்" என்ற பாடலையும், பெண்ணின் மனதைத் தொட்டு படத்தில் "கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்" பாடல் மற்றும் கள்வனின் காதலி, தென்னவன், நெஞ்சினிலே, வல்லதேசம் உள்ளிட்ட படங்களிலும் பாடல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கவிஞர் தேன்மொழியை திருமணம் செய்த முத்து விஜயன், அதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக முறைப்படி விவாகரத்து பெற்றுக்கொண்டார்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும் இருந்தவர் பாடலாசிரியர் முத்து விஜயன் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Famous songwriter Muthu Vijayan has passed away

Latest Articles

KOLNews