KOLNews

மே 31 வரை படப்பிடிப்புகள் ரத்து..! - ஆர்.கே.செல்வமணி தகவல் !

தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளன (ஃபெப்சி) தலைவர், ஆர்.கே.செல்வமணி, கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து சினிமா மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக, தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை குறைக்கும் விதத்தில் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் பல தொழில்கள் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது. இருப்பினும் சினிமா, சின்னத்திரை படப்பிடிப் புகளை, நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிட்டது.  அதையடுத்து, கொரோனாவின் தீவிரம் காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்படிப்புகள் மே 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஃபெப்ஸி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,கொரோனோ நிவாரண உதவியாக திரைப்பட தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.2000 வழங்க வேண்டும், திரைப்பட தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் என கடந்த வாரம் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தோம். இந்நிலையில், இந்த மாதம் இறுதி வரை ஷூட்டிங்கில் ஈடுபட மாட்டோம் என்று உறுதி எடுத்துள்ளோம்’ என்று  தெரிவித்துள்ளார்.

English Summary

Filming canceled till May 31 ..! - RK Selvamani Info!

Latest Articles

KOLNews