நடிகர் விஜய் தனது பனையூர் இல்லத்தில் இருந்து, நாமக்கல், திருச்சி மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் காணொலி காட்சி வாயிலாக பேசியுளதாகவும், அதில் அரசியல் சம்பத்தப்பட்ட விஷயங்களும் கோடிட்டுக்காட்டப்படும் வகையில் விஜய் பேசியுள்ளதாகவும் தகவல்கள் கசிகின்றன.
குறிப்பாக, ரசிகர்கள் சிலர், பணத்திற்கு ஆசைப்பட்டு, திமுக,அதிமுக, பாஜக கட்சிகளின் பூத் ஏஜென்டுகளாவும், ரஜினி, கமல் கட்சிகளுக்கு போய் உள்ளதாகவும் கேள்விப்பட்டு, மற்ற கட்சியினர் விரிக்கும் வலைகளில் விழுந்து விடாதீர்கள் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளதாகவும், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிக்கும் விஜய் தங்க காசு கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன், தனது தந்தை எஸ்ஏசியுடன் இணைந்ததால், இயக்க பொறுப்புக்களில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை விஜய் மீண்டும் கட்சியில் இணைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என அவரது தந்தையும், ரசிகர்களும் வலியுறுத்தி வருவது தெரிந்ததே.. இந்நிலையில், விஜய் பற்றிய இந்த தகவல் ஒருபுறம் பரபரப்பையும், மறுபுறம் அவர் ரசிகர்களையும் குஷிப்படுத்தியுள்ளது.
English Summary
Good things will happen soon ..! - Is Vijay signaling politics to the fans?