KOLNews

சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டை பெரும் ‘பச்சை விளக்கு’ திரை படம்

பெண்களை ஏமாற்றி காதலிப்பது போல நடித்து ஆபாச படம் எடுத்து அதை வைத்து பெற்றோர்களிடம் மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து எடுக்கப்பட்டிருக்கும் படம் தான் டாக்டர் மாறன் இயக்கி, நடித்துள்ள ‘பச்சை விளக்கு’ திரைப்படம். 

இப்படம் ஏற்கனவே சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்று பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த படம் சர்வதேச அளவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பாராட்டுகளைப் பெற்றுள்ளது. பூடான் நாட்டிலுள்ள பரோ என்ற இடத்தில் நடைபெற்ற ட்ராக் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு சிறந்த சமூக விழிப்புணர்வுக்கான படம் என்ற விருதைப் பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ட்ரிப்ள் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதினை வென்றுள்ளது.

அதே போல நியூயார்க் மூவி அவார்ட்ஸ் மற்றும் அப்ரோனடட் திரைப்பட விழாவின் இறுதித் தேர்வு (Finalist), லண்டனில் சிகேஎப் சர்வதேச திரைப்பட விழா, இத்தாலியில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவான ப்ளாரன்ஸ் திரைப்பட விழா, அமெரிக்காவில் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்பட விழா, சவுத் பிலிம் அண்ட் அர்ட்ஸ் அகடமி விழா மற்றும் பர்ஸ்ட் டைம் பிலிம் மேக்கர்ஸ் விழா ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ தேர்வாக கலந்துகொண்டுள்ளது, இதனை ஒரு சிறந்த விழிப்புணர்வு படமாக தேர்வாளர்கள் பார்க்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் டாக்டர் மாறன், எந்தவித பின்னணியும் இல்லாமல், சாதாரணமாக எடுக்கப்பட்ட ‘பச்சை விளக்கு’ படத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் , தனது முதல் முயற்சிக்கு கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டு இன்னும் நல்ல படங்களை தருவதற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

English Summary

Great ‘Pachai Vilaku’ screen film acclaimed at international film festivals

Latest Articles

KOLNews