KOLNews

நடிகர் சிம்புவிற்கு டாக்டர் பட்டம்..!

நடிகர் சிலம்பரசனுக்கு, ஏற்கனவே கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழக அரசு  கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ள நிலையில், தற்போது  வேல்ஸ் பல்கலைக்கழகம் அவருக்கு வரும் 11 ஆம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.

இது தொடர்பாக, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் கூறுகையில், 

“நடிகர் சிலம்பரசனுக்கு இந்த கவுரவ டாக்டர் பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்குத் தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களைக் கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள். 

அந்த வகையில் ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன். விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருவரின் வயதும், அவரின் தொழிலும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன்.

நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி”

என தெரிவித்துள்ளார்.

English Summary

Honorary Doctorate for actor Simbu ..!

Latest Articles

KOLNews