KOLNews

தனியாகத்தான் இருக்கிறேன..! - வலைத்தள வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகுல் பிரீத் சிங்..!

தான்  நடிகர் ஒருவரை  காதலிப்பதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார் 'தீரன்' புகழ் நடிகை ரகுல் பிரீத் சிங். 

தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்து வரும்  ரகுல் பிரீத் சிங், அண்மையில்  போதை பொருள் வழக்கில் சிக்கியது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. ஆனால் இதனை மறுத்துள்ள ரகுல் பிரீத் சிங், “நான் நடிகரை காதலிப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை. திருமண ஏற்பாடுகளும் நடக்கவில்லை. இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும் அது பெரிய கொண்டாட்டமாக இருக்கும்” என்றார். அத்துடன், “தமிழ், தெலுங்கு, இந்தியில் கைநிறைய படங்கள் வைத்து நடித்து வருகிறேன். இந்த படங்கள் அடுத்த வருடம் திரைக்கு வரும் என தெரிவித்தார்.

English Summary

I am alone ..! - Ragul Preet Singh puts an end to website rumors ..!

Latest Articles

KOLNews