KOLNews

நான் ஏமாற்றப்பட்டேன் ..! - மனம் வெறுத்து ட்விட்டரில் புலம்பிய பிரபல நடிகை !

ஆன்-லைன் மோசடி பேர்வழிகளுக்கு பல பிரபலன்கள் இரையாகி வந்தாலும், பெரும்பாலும் அவர்கள் வெளியில் சொல்லுவதில். அந்த வகையில் தற்போது 70 வயதான பழம்பெரும் இந்தி நடிகை ஷபானா ஆஸ்மியும் ஏமாற்றப்பட்டுளார். ஆனால் இவர் பிற பிரபலன்களை போல் மறைக்காமல், தான் ஏமாற்றப்பட்டதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக மது வாங்க, ஆன்-லைன்னில் கட்டணத்தை செலுத்தியுள்ள ஷபானா ஆஸ்மி, பொருள் வந்தடையாமல் ஏமாற்றம் அடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் , " ஜாக்கிரதை , நான்  ஏமாற்றப்பட்டேன், #Living Liquidz எனும் தளத்தின் மூலமாக பணம் செலுத்தியும், எனக்கு பொருள் வந்து சேரவில்லை. மேலும் இது குறித்து நான் விசாரிக்க முற்பட்டால் என்  ஃபோனையும் அவர்கள் எடுப்பதில்லை" என பதிவிட்டுள்ளார். இருப்பினும் அவர் இழந்த தொகை குறித்து அவர் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை. 

அவர் மீது இரக்கம் கொண்ட நலம்விரும்பிகள் ,  மது விற்பதாக சொல்லும் பெரும்பாலான ஆன்-லைன் வர்த்தக நிறுவனங்கள் போலியானவை என ட்விட்டர் மூலமாக ஷபானா ஆஸ்மிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.  

தனது திறமையான நடிப்பிற்காக, பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தவர் ஷபானா ஆஸ்மி என்பது குறிப்பிடத்தக்கது. 

English Summary

I was disappointed ..! - The famous actress who lamented on Twitter!

Latest Articles

KOLNews