KOLNews

இளையராஜாவுக்கு 'ஹரிவராசனம்' விருது..!

இன்று, கேரள அரசு பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கவுரவித்தது.

ஆண்டுதோறும் சபரிமலை தேவசம் போர்டும், கேரள மாநில அரசும் இணைந்து சிறந்த இசைக்கலைஞர்களுக்கு ஹரிவராசனம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

ஏற்கனவே இந்த விருது கே.ஜே.யேசுதாஸ், கங்கை அமரன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சித்ரா, பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டுக்கான விருதினை இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்திருந்தது. 

அந்த வகையில், சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் இன்று விருது வழங்கப்பட்டது. விருதுடன் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பணமும், 'Worshipful Music Genius' என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது குறிப்பாக மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக இளையராஜாவிற்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

Ilaya Raja receives 'Hariivarasanam' award

Latest Articles

KOLNews